மாறும் தலைமுறை

சுதந்திரம் வந்தது அடிமை ஒழிந்தது;
லஞ்சம் வந்தது லட்சியம் அழிந்தது ;
பஞ்சம் வந்தது பசுமை மறைந்தது ;
பணம் வந்தது பாசம் குறைந்தது ;
விஞ்ஞானம் வளர்ந்தது வியாதிகள் மலிந்தது;
கணினி வந்தது கணக்கு மறந்தது ;
பள்ளி பருவம் வந்தது பாடச்சுமை மிகுந்தது;
இத்தனையும் வந்தாலும் எதிர்த்து நின்றாலும்
பச்சை பாம்புகளாய் பயமுறுத்தினாலும்;
கலங்காது கல்வி கற்கும் எங்களுக்கு;
ராஜநாகம் குடை பிடிக்கும் காலம் வரும்;
ஆம்,
ராஜநாகம் குடை பிடிக்கும் காலம் வரும்.

எழுதியவர் : இரா.அமுதா சிவகுமார் (11-Apr-13, 7:47 pm)
சேர்த்தது : amudha sivakumar
Tanglish : maarum thalaimurai
பார்வை : 79

மேலே