OV 06 /OV 1 ஓவல் வில் டிரில்லிங், புஷ்பிட்டிங் வேலை செய்முறை வழிகாட்டி

1) ஓவல் வீல்களை அதற்குரிய பிக்சரில் பொருத்தி ரொடேசன் செக் செய்ய வேண்டும்
2) சாதாரண மற்றும் காந்தம் உள்ளடக்கிய வீல்களை மார்க் செய்யவும்.
3) காந்தம் உள்ளடக்கிய வீலுக்கு இரண்டுபுள்ளியும், சாதாரண வீலுக்கு ஒரு புள்ளியும் பஞ்ச் செய்யவும்.
4) இரண்டு வீல்கள் இணைந்து சுற்றும் போது இரண்டு இரண்டு புள்ளிகளுக்கு இடையே ஒற்றைபுள்ளி வருமாறு நிறுத்த வேண்டும்.
5) காந்தம் உள்ளடக்கிய ஓவல் வீலை டிரில்லிங் பிக்சரில் பொருத்தவும்.
6) காந்தம் உள்ளடக்கிய ஓவல் வீலை சரியான கோணத்தில் நிறுத்தவும்.
7) Drawing அளவுக்கு தக்கவாறு துளையின் விட்டத்தையும். ஆழத்தையும் துளையிடவும்.
8) துளையின் அடிப்பக்கம் எந்த கோணமும் இன்றி சரிசமமாக வருமாறு அதற்குரிய சரியான டிரில்பிட்டை உபயோகிக்கவும்.
9) டிரில்லிங் பிக்சரில் இருந்து வீலை கழற்றி (சாதாரண மற்றும் காந்தம் உள்ளடக்கிய) ஓவனில் வைக்கவும்.
10) சார்ட்டில் உள்ளபடி தேவையான உஷ்ணத்தையும் கால அளவுப்படி வைக்கவும்.
11) குறிப்பிட்ட நேரம் கடந்த பிறகு கார்பன் புஷ்களைஅதற்குரிய வீல்களில் பொருத்தவும்.
12) திறந்த வெளியில் வீல்களை சூடார வைக்கவும்.
13) அதன் பின்பு வீல்களை ஹோணிங் மிசினில் Drawing அளவுப்படி ஹோணிங் செய்யவும்.
14) ஹோணிங் செய்த பிறகு அதற்க்குண்டான கேஜ் மூலம் அளவுகளை உறுதி செய்ய வேண்டும்.
15) 4 மி.மீ x 4 மி.மீ அளவுள்ள இரண்டு காந்தங்களை துளையில் பொருத்தி சீலிங் பின்களின் மூலம் துளையினை அடைக்கவும்.
16) காந்தங்களை சீலிங் பின் மூலம் சரியான முறையில் (வெளியே வராதபடி) பொருத்தப்பட்டுள்ளதா என சோதிக்கவும்.
17) சென்டர் லேத்தில் தற்குரிய மேன்டரில் பொருத்தி பேசிங் மற்றும் ஒ.டி டர்னிங் செய்ய வேண்டும்.
18) ஓவல் வீலின் கூர்மையான பிசிர்களை பைலிங் செய்து நீக்கவும்.
19) ரொடேசன் பிக்சர் உபயோகித்து ஓவல் வீல்களின் ரொடேசன் செக் செய்ய செய்யவும்.
20) வரிசை எண் பஞ்ச் செய்து தரப்பரிசோதனைக்கு அனுப்பவும்.

எழுதியவர் : (11-Apr-13, 7:40 pm)
சேர்த்தது : prashanth
பார்வை : 56

மேலே