ஞாபகப் படுத்தவில்லையா காதலியே ?

நாம் இதழ்களால்இணைந்திருந்த போது...
இடைமரித்த அழைப்பு மணியால்
எனக்கு ஏற்ப்பட்ட இதழ் காயமும்!

உன்னை என் பார்வையால் கட்டிப்போட்டு
விரல்களால் உன்னுடன்
பேசிக்கொண்டிருந்த போது
விசுக்கென வந்த சிறுமியும் !

பத்து முத்தம் தருவதாய் வாக்கு தந்து
எட்டாவது முத்தம் முடிகையில்
நீ தோற்று போக காரணமாக
ஓங்கி தும்மிய பாட்டியும்!

நெருக்கமாய் இறுக்கமாய்
நம்மை மறந்து நாம் இணைந்திருந்த போது,
பொசுக்கென வந்திட்ட மின்சாரமும் !


உன்னிடம் என் காதலை
சொல்லிய நாளில் நான் அணிந்திருந்த
வெள்ளை சட்டையும்!

முதன் முதலாக
நீ எனக்கு கொடுத்த
நா .முத்துக்குமார்
கவிதை புத்தகமும்!

என் புத்தகத்தின் நடுவே நீ
வளரும் என்று வாஞ்சையுடன்
வைத்த மயில் இறகும்!

தேர்வில் தோற்று மேல் மாடியில்
அமர்ந்திருந்த என்னை தேற்ற முடியாமல்
நீ தேம்பிய இடமும்!

தேர்வில் பெற்ற வெற்றிக்காய் என் தேகம்
நீ அணைத்த போது
என் முதுகில் பதிந்த உன் விரல் நகத்தின்
அடையாள தளும்பும்!

இன்னும்
சொல்ல முடியா சிலவும் ......
எழுத முடியா
பலவும் ......

ஒவ்வொரு நாளும் நான்
அலுவலகம் செல்லும் போதல்லாம்
ஞாபகப் படுத்துகிறது அனிச்சையாக உன்னை!

அன்பே இதில் ஓன்று கூட ஞாபகப் படுத்தவில்லையா ?
உன்னில் என்னை !

விடைகலற்று வாழ்ந்து
கொண்டிருக்கிறேன் !.நீ
என்னுடன் இல்லை என்றாலும் ...

நீ ஆசைப்பட்டு என்னை
போகச் சொன்ன வேலைக்காய் ......

என்னை விட
சிறியவர்களுடன் கலந்து!
அவமானத்தால்
தலை கவிழ்ந்து!

இன்று,அரியர்ஸ்
அனைத்தும் கடந்து !
நீ விரும்பிய வேலைக்கு
போய்க்கொண்டிருக்கிறேன் !

நீ என்னோடு தான் இருக்கிறாய் என்ற
எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ......

எப்போவதாவது, யாராவது,
உன்னிடம் நீ விரும்பிய வேலைக்கு தான்
நான் போய்கொண்டிருக்கிறேன்
என்று சொல்வார்கள் என்ற ,

சினிமாத்தனமான
நம்பிக்கையில் !
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,.
காதலியே .......

எழுதியவர் : ராஜேஷ் ப (11-Apr-13, 7:34 pm)
பார்வை : 171

மேலே