கல்லூரி வாழ்வை கற்போடு கட:-

கல்லூரி வாழ்வை கற்போடு கட:-

கண்ணே! கனியமுதே! காவியமே!
கண்டவர் மயங்கும் ஓவியமே!
என்னை தாயென்று அழைக்கும் தங்கமே!
அன்னை ஆசிர்வதித்தால் மன்னனாக வாழ!

கண்ணா! வாழை கன்றே! இளங்கதிரே!
என் பெயர் சொல்லும் மன்னா!
தலைமுறை பேர் சொல்லும் மரிக்கொழுந்தே!
வாடாத வாழ்த்தை வாழ்த்தினார் தந்தை!

உறவும் ஊரும் நோக்க நோக்க
உயரமாக வளர்ந்தது பேரும், புகழும்
கனிந்து காலமும் வந்ததொரு பொழுது
அஃது கல்லூரி யென்ணும் தேரோடு!

கல்லூரி தேரில் கட்டிளங் காளை
கண் மூடி இன்ப கடலென்று
புகையுடன் மதுவும் கையிலாட
பகையாக வந்தமர்ந்தது மங்கை மோகம்!

தொட்ட மங்கையை ஒருமுறை தொட
தொடாத மங்கையை தினம் தினம் தொட
வந்த மங்கை விட்ட குறையொன்று
ஆட் கொல்லும் உயிர்கொல்லி நோயாக!

உண்மையை சொல்கிறேன்; உரிமையோடு சொல்கிறேன்
உண்மையாயிரு உன்னவள் உன்னிடம் வரும் வரை
பொறுமையாயிரு பெற்றோர் பொறுப்பை கொடுக்கும் வரை
கல்லூரி வாழ்வை கற்போடு கட!!!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (11-Apr-13, 7:03 pm)
சேர்த்தது : siva71
பார்வை : 79

மேலே