அரைகுறை தமிழன்!!!

அரைகுறை தமிழன்!!!

ஒலியின் கருவில் உதித்த குழந்தை
உலகில் மொழியாக உலாவி வாழ
ஒருங்கினைத்தவொலியில் இனிமையுடன் இளமை சேர்த்து
ஆதிதமிழன் தந்த வுயிர்மூச்சு தமிழாகுமே!

அகத்தில் மனைவி மக்களை யேற்றி
அன்னையை அடித்து துறத்தும் மனிதா
ஆங்கிலத்தை நுனி நாக்கில் மணமுடித்து
அன்னைதமிழை அழிக்கு”நா” மனைவரும் விலங்குதானே!

பல சொல்லொலி வார்த்தையை பாடையிலேற்றி
தமிழின் உயிரை கொல்லுமிந்த ஆங்கிலத்தை
வண்ண விளம்பர பலகையில் ஏற்றி
வாழ்த்தும் வணிகரை தமிழராக கொள்ளலாமோ!

அன்னையை பலாத்காரம் செய்வதை பார்க்க
பொறுக்கா வெகுண்டெழும் மனிதா- நின்
அன்னையான தமிழ்சொல்லை மட்டும்
நின் ”நா” பலாத்காரம் செய்யலாகுமோ!

ஐயறிவு விலங்கும் தாய் மொழியுடன் பிறந்து
தன் தாய் மொழியுடன் மரித்து போக
தாய் மொழியுடன் பிறந்து – தன்
தாய்மொழி பேச, எழுத மறந்தயினம் தமிழினம் மட்டுமோ!

பள்ளி, வகுப்பறையென்ற சொல்லெல்லாம் மறைந்து போக
தேர்வு, விடுமுறை யென்ற சொல்லும் சேர்ந்து போக
ஆங்கில வெள்ளத்தில் மூழ்கியழித்த பெருமை
தமிழ னென்று சொல்லும் நம்மையே சாறும்!

ஆதி தமிழன் உருவாக்கி உலாவ விட்ட
அழகு தமிழின் பள்ளி சேலை(வை)யை உருவிவிட்டு
அங்கம் தெரியும் ஆங்கில யுடையுடுத்தி மகிழும்
தமிழின் உயிரை கொல்லும் அரைகுறை தமிழன் நாமே!?


நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (11-Apr-13, 6:00 pm)
சேர்த்தது : siva71
பார்வை : 70

மேலே