போலிகள்

இறைவா கருப்பொருலானவன் நீ,
கல்லாய் சமைந்துவிட ,
யார் யாரோ புதிது புதிதாய்,
அறிவிக்கிறார் கடவுளென !

அங்கொன்றும் இங்கொன்றும் ஆலயங்கள் ,
அதிகமாய் இருக்குது ஆசிரமங்கள்,
வித்தைகள் காட்டி விளையாடுகிறார்கள்,
இந்த மாய சித்துக்காரகள் !

பகுத்தறிவு மறைந்துபோன,
பகட்டு உலகத்தில் ,
பார்ப்பவரெல்லாம் காட்சியளிக்கிறார் கடவுளாய் !

உலகசுகம் எல்லாம் வெறுத்து ,
உறவுகளை எல்லாம் வெறுத்த,
காசி தேடி போனவர்களை கண்டிருக்கிறேன்,
இங்கோ தலைகீழ் !

இங்கே குளிரூட்டும் அறையும்,
கொஞ்ச சில பெண்களும் ,பஞ்சும் மெத்தையும்,
பட்டு குஞ்சலமும் ஏக போகமாய் ,
அன்றாடம் அவதரிக்கிறது அவதாரங்கள் !

அவதாரங்கள் அதிகரிக்க ,
ஆங்காங்கே முளைக்கிறது ஆசிரமங்கள்,
கூடும் கூட்டமெல்லாம் குத்தாட்டம் போட்டு,
அப்பட்டமாய் நடக்குது கூட்டு பிரார்த்தனை !

கண்விழித்து கண்டெடுத்த ,
காசு பணத்தையெல்லாம் ,
கண் தெரியாமல் கொண்டுபோய் கொட்டுது,
ஓர் பக்தர் கூட்டம் !

தங்கமும் ,வெள்ளியும்,
கட்டு கட்டாக பணமும் ,
கொட்டுது இங்கே காணிக்கைகளாக!

போதனை பெயரில் ,
போலி சாதகம் செய்யும் சல்லாப சாமிகள்,
ஏமாற்றுவேலை என தெரிந்தும்,
அனுமதிக்கும் அரசுகள் !

சமூகத்தை சீரழிக்கும் ,
சந்ததிகளை பாதை மாற்றும் ,
இதுபோன்ற நிழவுகளை ,
இனியாவது மாற்றுவோம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (12-Apr-13, 6:11 pm)
பார்வை : 169

மேலே