முந்தியது அழகு...
முந்தியது அழகுதான்
பிந்தியதை விட...
சில்லுகளாய்
உதிர்ந்த இதழ்களின்
முந்திய முழு மலர்...
"ஓ"வென பெய்த மழையின்
முந்திய சாரலும் தூறலும்...
மேற்கில் முழுவதுமாய்
இல்லாமற் போன அஸ்தமனத்தின்
முந்திய நிறக்கோலம்....
திருமண ஊர்வலத்த்ற்கு
முந்திய காதல் உலாக்கள்...
பொறுப்பே சுமையாகிய வாழ்வில்
தகப்பனின் முந்திய பிள்ளைப் பருவம்....
கைக்குழந்தைக்காரிக்கு
தனது
நிறை மாத தள்ளாட்ட நடை....
இன்றைய பகைமையின்
நேற்றைய தோழமை.....
ஆனாலும் ,
விடுதலைக்கு முந்திய அடிமை வாழ்வு
எப்போதும் அழகில்லை........