இடுகாடு ஓர் இறுதிப்பயணம்

பொதுவாக இது பேய்கள் உலகம்
இங்கு பிணங்கள் நடமாடும்
ஆந்தைகள் அலறும்
அழுகைகளே நிறைந்திருக்கும் ......
இயங்க மறுத்த உடலின்
இறுதிப்பயணம் இது
இங்கு உறங்க யாருக்கும் விருப்பம் இல்லை
இங்கு உறங்கிய யாரும் எழுந்ததில்லை .......
ஓரடியாய் பிறந்த மனிதன்
ஆறடியில் அடங்கும் இடம்
அணுக்கள் தோற்றிய உடலை
புழுக்கள் தின்று தீர்க்கும் இங்கு .......
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
ஆட்டிவைத்தவர்களும்
அடங்கி போனவர்களும்
அமைதியாய் ஒன்றாய் இங்கு ...........
இங்கு சிரித்தவர் அழுவார்
அழுதவர் சிரிப்பார்
இது வாழ்ந்தவர்களுக்கான வழக்காடுமன்றம்
மனிதராய் இருந்த கடவுளும் உண்டு
கடவுளாய் மாறிய மனிதரும் இங்கு உண்டு ........
சிலருக்கு இது விடுதலை பயணம்
பலருக்கு இது விரும்பாத பயணம்
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விருப்பம்
ஆனால் இறுதி மட்டும் இங்கே இருக்கும் ......
காசு பணமும் இங்கு செல்லாது
அதட்டலும் அதிகாரமும் தோன்றாது
உறவும் உலகமும் இங்கு வராது
வாழும் வரைக்கும்தான் எல்லாம்
வாழ்ந்தபின் ?......................