அஹிம்சைக்கு பேரு .....

வீதிக்கு வீதி
வேண்டாண்டா சாதி...
வளர்ப்போம்
புது போதி......

வீட்டுக்கு வீடு
போட்டிதான் போட்டு
உழைப்போம்
இது சேதி.....

தடுக்கற எதுவும்
நிலைக்காதுடா .....
கிடைக்கற அனுபவத்த
சலிக்காதடா.....
உனக்காக உண்மையை
வளைக்காதடா .....
ஒரு போதும் தன்மையை
இழக்காதடா ......

ஊருக்கு ஊரு
ஏழைதான் பாரு....
இது தான்
தமிழ் நாடு.......

கோடிக்கு மேல
கொல்லுது ஆள ....
இதுவும்
தமிழ் நாடு....

அஹிம்சைக்கு பேரு
பாரதம்தாண்டா ....
அடிதடின்னு வந்தாலும்
அடி தூள்தாண்டா ....

பத்து விரல் ஆயுதம்
பார்த்துக்கோடா...
பக்குவமா கையாள
கத்துகோடா.....

எழுதியவர் : கவிஜி (15-Apr-13, 2:54 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 89

மேலே