மண்

பட்டாம் பூச்சியின்
சிறகில் அமர்ந்த படி
ஒற்றை ரயிலின் காத்து பிடித்து
இழுத்து பறக்கிறேன்.....

வானமெங்கும்
கரப்பான் பூசிகளின்
கண்சிமிட்டல்கள்....

ராட்சச கைகள்
மின் விசிறிகளாய்
சுழல்கிறது
சுவாச மணடலத்தில்.....

சிறு குழந்தைகள்
பரீட்சை எழுதுகிறார்கள்....
அடுத்த வேளை
உயிர் வாழ்வதற்கு.....

வெடித்து அழும்
கண்கள்
அணுகுண்டுகளின்
சாரம்சத்தை
மிஞ்சிக் கிடக்கிறது......

கடவுளை கொல்ல
திட்டம் தீட்டப் படுகிறது....
மலக் கூட்டத்தின் நடுவில்.....

திடும் மென
கொம்பு முளைத்த சாத்தான்கள்
தோழன்களாகி விடுகிறார்கள்....
அடுத்தவன் சாதத்தில்
கை வைக்கும் பொழுதுகளில்.....

அழுகையும் சிரிப்பும்
ஒரே மாதிரியா.....
அர்த்தம் கேட்கும்
பிள்ளைக்கு
செம் மொழியில் சொல்லவா....
இல்லை
அம் மொழியை கொல்லவா. ...

மன நலம்
பிறழும் மயக்க நிலை
என்ன செய்யுமோ
மானுடத்தை.....

உயிரோடு இருக்கையில்
மனம்
உடைத்து விளையாடுகிறது
பிணம் சுற்றிய
மண் குடத்தை....

எழுதியவர் : கவிஜி (15-Apr-13, 2:55 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 77

மேலே