அழிவில்லா குழந்தை-- முகநூல்(facebook )

முகநூல்,
எல்லோரையும் அடிமைபடுத்திய,
விஞ்ஞான தாயின்
மற்றுமொரு அழிவில்லா குழந்தை..!!

முகநூல்,
ஒரு முகம் அல்ல,
ஒப்பனைகளுடன் ஓராயிரம் முகம் கொண்ட
முகமூடி போட்ட திருடன்..!!

முகநூல்,
இளைஞர்களின் நிமிடங்களை
திருடி தின்று உடல் வளர்க்கும்
மரணமில்லா அசுரன்..!!

முகநூல்,
உலகத்தை தன் பிடியில்
வளைக்க துடிக்கும்
விஞ்ஞான கொள்ளைக்காரன்..!!

முகநூல்,
அவளை அவன் எனவும்,
அவனை அவள் எனவும்,
சிறு நொடியில் மாற்ற அனுமதிக்கும்
போதை மருத்துவன்..!!

முகநூல்,
ஓடிக்களித்த பொழுதுகளை,
ஒற்றை பக்கத்தில் அடக்கி காண்பித்த
மாயவலை மோசக்காரன்..!!

முகநூல்,
எவன் பிறந்தாலும்,
எவன் இறந்தாலும்,
ஒற்றை வரியில் செய்தி சொல்ல வைத்த
புதுமுறை ஒற்றன்..!!

முகநூல்,
மூன்றாவது மனிதனின் வாழ்க்கையில்
மூக்கை நுழைக்க வழி காட்டிய
மூளைக்கார பொடியன்..!!

முகநூல்,
முகம் சுளிக்க வைக்கும் வரை
மயங்கி ரசிக்க வைக்கும்
தந்திர வசியக்காரன்..!!

முகநூல்,
மூச்சு காற்று அடைக்கும் வரை
சுவாசிக்க செய்யும்
ரசாயன கலவை அமுதம்..!!

முகநூல்,
மனிதனின் பல உண்மை முகங்களை
வெளிச்சம் போட்டு காட்டிய
விஞ்ஞான நண்பன்..!!

எழுதியவர் : மனோ ரெட் (15-Apr-13, 3:33 pm)
பார்வை : 186

மேலே