அ(னா)வசியம்
தள்ளாடி கிடக்கும் தாய் தந்தையை
உள்ளோடு உறவை வைத்து
இல்லொடு இனிதாய் காத்திடல்
அ(னா)வசியம்...
உறவினை மதித்து - அதன்
பிரிவினை உணர்ந்து - தருணத்தில்
அரவணைத்து நிற்பது
அ(னா)வசியம்...
பிஞ்சுக் கைகளை ஏந்திக் கொண்டு
எஞ்சிக் கிடப்பதை பிச்சைக் கேட்டிடும்
நஞ்சரிய அரும்பிடம் கருணை கொள்ளுதல்
அ(னா)வசியம்...
சாலை விதிகளை மதித்து - சற்றே
மூளையில் முன்னெச்சரிக்கை விதைத்து - நாளைய
நா(லை)ளையும் எண்ணி நன்றே பயணம் செய்திடல்
அ(னா)வசியம்...
ஊசிப் போல நுழைந்து - சந்தனமாய்
நாசி தனைத் துளைத்துப் பின் - சாக்கடையாய்
வீசுகின்ற அரசியலை வீசி எறிதல்
அ(னா)வசியம்...
கடற்கரைச் சாலையில் தினமும்
கலாச்சாரம் கழித்திடும் - பல
கரியமில வாயுக்களை கழிந்து விடுதல்
அ(னா)வசியம்...
இவ்வாறே,
அவசியம் அனைத்தையும்
அனாவசியம் ஆக்கிவிட்ட - இந்த
சமூகத்திற்கு சற்றே உரக்கச்
சொல்ல விழைகிறேன் - இவை
அவசியம் என்று.....