பெண்கள் 2013

கனவுலக தேவதைகள்
கற்பனையில் மட்டும் கடவுள்கள்
கசக்கி போடும் காகித பூக்கள்
காம இயந்திரங்கள் ........

பொதுவுடைமைகள் பேசப்படும்
இவர்களுக்கு மட்டும் ஏசப்படும்
சுதந்திர நாட்டிலும்
இவர்கள் அடிமைகள் ..........

இன்பத்தின் வாசல்கள்
துன்பத்தின் தூண்கள்
விளைவிக்கும் நிலங்களும்
விலைபோகும் நிலங்களும் .........

வெள்ளை ரோஜாக்களும்
சிகப்பு ரோஜாக்களும்
சில சமயம்
கருக்கும் ரோஜாக்களும் இவர்கள்தான் ........

சிறைபட்ட மான் இனங்கள்
கால் ஒடிந்த மயில்கள்
கூண்டில் அடைபட்ட குயில்கள்
கழுகுகளால் துரத்தப்படும் பறவைகள் ........

ஓய்வில்லா உழைப்பாளிகள்
ஒத்தாசைக்கு துணைவிகள்
ஒருதலை காதலுக்கு இரையாகும்
உத்தம இனங்கள் ...........

தாய்மை இனங்கள் , தியாக குணங்கள்
சமுதாயத்தில் மட்டும் ஏனோ
இவர்களுக்கு இல்லை சாகா வரங்கள் ..........

எழுதியவர் : வினாயகமுருகன் (16-Apr-13, 1:41 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 137

மேலே