உதயம்
அதிகாலையில் உன்
வீட்டு வாசலில்
நீ! போட்டு சென்ற
பல வண்ணக்கோலங்களை
காண்பதற்காகவே
வானில் போடப்பட்டிருந்த
நிலா கோலத்தையும்
நட்சத்திர கோலங்களையும்
அழித்துக் கொண்டு
சூரியன் உதயமாகிறனோ
-வைகைமணி.