ஒரு பிரிவும்...ஒரு உறவும்....

பரிசுகளால் ...
நிறைந்து விட்டது உலகம்.
நட்பின்
பரிமாற்றங்களாய் இருக்கலாம் அவை.
ஆனாலும் இன்று...
பழைய புத்தகக்காரனின் துலாக்கோலில்..
"அன்புடன்"
கையெழுத்திட்ட புத்தகங்களைப் பார்த்தேன்.
ஒருவேளை...
இந்த உலகம்
விற்கப்படும் நட்புக்களாலும்
நிரம்பி இருக்கக் கூடும்.
************************************************************************
உறவுகளால்
நிரம்பி வழிகிறது இரயில் நிலையம்..
பிரிவுகளும்..கை குலுக்கல்களும்...
எதிர்பார்ப்புகளுமாய்...
வாலாட்டும் நாய்களை விரட்டாமல்...
ரொட்டி வீசும் இயல்போடு
நிரம்பி நின்றது இரயில் நிலையம்.
வண்டி வந்து கடந்தபின்னர்...
துள்ளல்கள் குறைந்து ...
இலேசாகிவிட்ட
இரயில் நிலையத்தின் இதயம்...
தளும்பி நிறையும் உறவுகளுக்காக
யாரும் அறியாத ஓசையுடன்
துடித்துக் கொண்டிருக்கிறது...
வாலாட்டிச் செல்லும்
நாய்களின் அசைவுகளோடு.
********************************************************************

எழுதியவர் : rameshalam (17-Apr-13, 6:13 pm)
பார்வை : 98

மேலே