விவசாயின் வாழ்க்கை

"வெளஞ்ச கதிருக்குள்
வாழ்க்கை ஓளிச்சிருக்கு

கருக்கு அருவாளில்
முச்சு மறஞ்சிருக்கு

ஓரு கானி நெலமிருக்கு
அதில் ஓரு லட்சம் கடனிருக்கு

ஓரு துளி நீர் கிடைக்க
பூமி பல காலம்
காத்திருக்கு

இத்தனையும் எனக்கிருக்க
எங்கே நான்
ஏர் புடிக்க !!

அடுத்தடுத்து மக சமஞ்சு நிக்கா
அடுக்கலைக்குள் புகுந்து நிக்கா

பிதுக்கு மருந்து போட்டுக்கிட்டு
புட்டா மாவு புசிக்கிட்டு

ஆத்தா சேலையில
அரை மானம் காத்துக்கிட்டு

அருக்கானி என்கிருக்கா
அடகு வைக்க நகை கொடுக்கா

"புகுந்த வீடு செலவுதாங்க
பொறந்த வீடு வரவுவுதாங்க"

இத்தனையும் எனக்கிருக்க
எங்கே நான்
ஏர் புடிக்க !!

இருண்ட இரவுக்குள்
ஓருக்களிச்சு படுத்துக்கிட்டேன்
எத்தனையோ ராவு துக்கம்
தெலைஞ்சி போச்சு தெரியலையே ?

எழுதியவர் : சுந்தா (17-Apr-13, 9:04 pm)
சேர்த்தது : meyyappan
பார்வை : 185

மேலே