கற்பு தேவையா ?

கற்பு தேவையா ?என்ற ரீதியில் பதிகிறேன்

கற்பு கால காலமாக பின் பற்றி வருகிறோம் ஆனால் ஏன் பின் பற்றுகிறோம் என்பது மட்டும் தெரிவதே இல்லை ......ஆகையால் வெறும் கட்டாயத்தின் பேரில் மட்டும் பின் பற்ற படுவதால் தொல்லயை மட்டும் சந்தித்து வருகிறது நமது சமுதாயம் ............

ஒரு புதிய சமுதாயத்தின் ஆரம்பம் இந்த உடலுறவில் இருப்பதை மட்டும் நமது மடமனது புரிந்து கொள்ளவே மறுக்கிறது இதனை புரிந்து கொள்ளும் போதுதான் உறவை பயன்படுத்தும் வல்லமை வாய்க்கும் அதை விடுத்து ஏதோ ஒன்றை போல் அலைகிறோம் அதற்கு மிக முக்கிய பங்கு கலாச்சார சீர்கேடு, கேட்டால் நவீன நாகரீகம் என்போம் கடன் வாங்கிய நாகரீகம் என்பது கூட தெரியாமல் பின் பற்றிவரும் நாகரீகத்துக்கு பெயர் நாகரீகமா அல்லது கலாச்சார போதையா ....இவ்வளவு விளக்கம் தேவை இல்லைதான் இருந்தாலும் முக்கியத்துவம் உடையது ..........மனசை சீர்கேடு அடைய செய்துவிட்டு உடம்பை பாதுகாப்பதில் என்ன பயன் இரண்டுமே நமக்கு இயங்கு சக்திகள் அல்லது இரு மாட்டு வண்டி ஒரு மாடு நோவால் ஓடினால் வண்டி ஓடிவிடுமா என்ன ? ..........

ஆம் நான் முன்னவே கூறினேன் உறவை பயன்படுத்தும் அறிவிக்கு பெயர்தான் கற்பு ...உறவில் இருக்கும் போது தாய்க்கும் தந்தைக்கும் (ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றால் நான் முட்டாள் எனது தாய் தந்தைக்கு உங்களது தாய் தந்தைக்கு இடையில் இருந்த உறவு என்ற ரீதியில் நான் பேசுவதால் மட்டுமே இது புதிய கோணம் பெரும் -நாகரீகத்தின் அல்லது பண்பாட்டின் உச்சத்தை தொடும் )இடையில் காதல் உணர்வு வேண்டும் ,நாம் சமுதாயத்தில் புதிய அங்கத்தை உருவாக்க போகிறோம் அது நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன் பட வேண்டும் என்ற உணர்வு வேண்டும் ..........உடலளவில் மட்டும் அல்ல மனதளவிலும் எந்த ஒரு குற்றஉணர்ச்சியும் இல்லாது இருத்தல் வேண்டும் குற்ற உணர்ச்சி இருந்தால் பிறக்கும் குழந்தையும் குற்றவாளியாகத்தான் மாறுவான் பின் குடுமபமா நடத்துவான் கடைசியில் பிள்ளை சரிஇல்லை என்று தாயும் தந்தையும் குறை சொல்ல வேண்டியது ..........நான் சொல்வேன் விதைத்த விதை சரிஇல்லை குறை விதைத்தவனின் இடத்திலோ அல்லது விதைந்த நிலத்தின் இடத்திலோ இருப்பதை மட்டும் யாரும் புரிந்து கொள்வதே இல்லை ............விதை ,நிலம் ,சூழல் இருந்தால்தான் ஒரு மரமே வளருமாம் ஆனால் இருபால் உறவுக்கு மட்டும் இது தேவை இல்லையாம் நல்லாஇருக்குப்பா உங்க "தர்க்கசாஸ்திரம்" (logic) இதைதான் அறிவு என்கிறேன் காமம் குறித்த அறிவு தேவை அதாவது பயன்படுத்தும் நுட்பம் எல்லோருக்கும் தேவை அதுதான் கற்பு...........

காமத்தை புரிந்துகொள்ளாமல் கற்பை பற்றி வாய்கிழிய பேசினால் போதுமா .......நான் பெரிய காம விஞ்ஞானியோ அல்லது எல்லோரும் காமுகன் பட்டம் சூட்டி பல்இழிப்பார்களே அவனும் அல்ல, வெறும் எளிய அறிவை உடையவன்தான் ஆனால் அது தர்கத்திற்கு என்று உபயோகம் செய்கிறேன் அதனால் உங்கள் பார்வைக்கு நான் திமிர் பிடித்தவன் போல் தோன்றலாம் ...எனது தர்க்கசாஸ்திர வினாக்களுக்கு விடையை மட்டும் மனதில் ஏற்றி விவாதியுங்கள் மாறாக என்னை கணக்கில் எடுத்தால் விசயத்தின் இழப்புதான் ஏற்படும் ............

நான் கூற வந்தது ஒரு இயந்திரத்தை உருவாக்க தொழில் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும் அதை போலதான் காமமும் அல்லது கற்பும் ....இயந்திரம் பிழையானால் அதனை படைத்த விஞ்ஞானியிடம் சரியான அறிவு இல்லை என்றுதான் பொருள் ...........அதுபோலதான் " கற்பும் " பயன்படுத்த தெரிந்துகொள்ள வேண்டும் ஆனால் இங்கோ நிலைமை நேர்க்கு மாறாக அமைந்துள்ளது குழந்தையை கிள்ளி விடுவார்களாம் ஆனால் குழந்தை அழாமல் இருக்க வேண்டுமாம் ஹா ஹா ஹா இதுதான் மதமும்,சட்டமும்,வியாபாரமும் செய்து கொண்டிருக்கும் விஷயங்கள் .........இதற்கு மனித இனமே போர்க்கொடி ஏந்தவேண்டும் வருங்கால சமுதாயத்திற்கு தெரிந்தே விசத்தை பரப்பி வரும் இவர்களால் பயன் என்ன ?ஆனால் நாமோ பல்ல காட்டிகொண்டிருக்கிறோம் என்னையும் சேர்த்துதான் நான் என்ன வேற்றுகிரகவாசியா.........புரிந்தவர்கள் ஒன்றுகூடினால் அன்றி விஷயம் ஒருவரால் அறியபட்டு மண்ணோடு புதைந்து விடும் .......

பெண்களை போக பொருள் போல் சித்தரிக்கும் விளம்பரங்கள் இருக்கலாம்,பச்சையாக விளம்பர பலகைகளில் பெண்களின் அங்கங்களை ஆபாசமாக சித்தரித்து தாய்மையை கொச்சை படுத்தலாம் ,ஆனால் காமத்தை குறித்தோ அல்லது கற்பு நெறி குறித்தோ பாடம் மட்டும் கல்வியில் இருக்க கூடாது இருந்தால் மாணவன் கெட்டுபோய்விடுவான் .......அடிமுட்டாள் இனம் கூட இதற்கு தலை ஆட்டாது..........ஆனால் நாம் தலைஆட்டுகிறோம் இதிலிருந்தே தெரியவில்லை நாம் நம்பும் மதகுருவில் இருந்து ,அரசியல்வாதியிலிருந்து ,விளம்பர கர்த்தாக்கள் வரை நம்மை பச்சையாக ஏமாற்றி வருகின்றனர் ..............தமது இனத்துக்கு தாமே விசத்தை தெளிப்பது நமது மனிதஇனமாக மட்டும்தான் இருக்கும் ,எனது வாழ்த்துக்கள் ஏனெனில் நானும் இந்த கிரகத்தில் பிறந்துவிட்டேனே .........

கற்பு என்பது ஒழுக்கம் அல்ல ..........அது அறிவு - ஒழுக்கதிற்கும் அறிவிற்கும் தொடர்பே கிடையாது அறிவு என்பது பயனபடுத்தும் நுட்பம் சார்ந்தது ,புத்தியின் அங்கம் பிறந்தது முதல் கூடவே இருப்பது ஆனால் ஒழுக்கம் என்பது கட்டுப்பாட்டின் அங்கம் அதுவும் புரிந்துகொண்டுதான் செயல் படுத்த வேண்டும் .........இப்போது நாம் அறிவை கொண்டு பயன்படுத்தினால் அது கற்பு அது அல்லாது ஆசையை , இச்சையை கொண்டு பயன்படுத்தினால் அது காமம் ,ஆசையும் தேவைதான் ஆனால் அது சீர்அமைக்கப்பட்ட ஆசையாக இருந்தால் நலம் இங்கு அப்படியா இருக்க விடுகிறார்கள் இதைதான் நான் சொன்னேன் பிள்ளையை கிள்ளி விட்டு குழந்தையை அழ கூடாது என்று சொன்னால்..... சுற்றமும் முக்கியம் தனிமனித ஒழுக்கமும் முக்கியம் இரண்டுமே இங்கு மறந்துபோனது அல்லது மறைக்கபடுகிறது,ஒழுக்கம் குறித்து வேறு ஒரு பகுதியில் விரிவாக சொல்கிறேன் இப்போதைக்கு கற்பு ......... அதை பயன்படுத்தும் அறிவியலில் இருபால் விஞ்ஞானிகள் ஒன்று சேர்கின்றனர் நம் தாய் தந்தை இருவரும்தான்.....அவர்களின் அறிவு நிலைக்கு தக்கவாறு குழந்தை பிறக்கிறது ............அறிவு நிலை குறித்து அறிந்து செயல்பட்டால் அன்றி சமுதாயத்தின் விசசெடிகள் வளர்ந்த வண்ணமே இருக்கும் ..........கற்புநெறி குறித்து அறிந்துகொள்வோம் தவறே கிடையாது அறிவதில் தவறா? அறியாமையில் தவறா ?சிந்திப்போம் செயல்பட முயற்சிப்போம் .................

"என்னிடம் கேட்டால் நான் சொல்ல வரும் விசயத்தின் சாரம் இதுதான் ,குழந்தையை வளர்க்கும் அறிவு தாய் தந்தைக்கு இருவருக்கும் இருக்க வேண்டும் அது இல்லாமல் உறவு கொள்வதால் எந்த பயனும் இல்லை அதற்கு பெயரும் கற்புநெறியற்ற என்றே பெயர் சூட்டலாம் .........அடுத்து குழந்தை பெரும் நோக்கம் அல்லாமல் இச்சையை தனித்து கொள்ள மட்டும் முறையான உறவு வைத்து கொள்வது சரியான கோணம் அல்ல அதிலும் விட்டு கொடுத்தல் ,காமத்தை கடவுளாக பாவித்தல் என்றெல்லாம் இருக்கிறது இப்படி அல்லாது வைத்து கொள்ளும் உறவுகளும் கற்புநெறியற்ற கோணமே .........முறையற்ற நடவடிக்கைகள் குறித்து நான் சொல்ல தேவையில்லை அது செதுக்கபடாத இச்சை அல்லது நாம் பார்த்து வரும் விளம்பர உலகின் விசங்கள் அதில் கற்பும் கிடையாது காமமும் கிடையாது அது ஏதோ மிருகத்தனமான செயல் என்றுதான் சொல்ல வேண்டும் இதற்கு மேல் சொல்ல வந்தால் நான் பண்பாட்டின் வார்த்தைகளை மீற வேண்டியவிருக்கும் அது தேவையில்லை .....கற்புக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை இதுவெறும் உடன்பாட் டு கற்பழிப்பு என்று பெயர் சூட்டுகிறேன்"
கற்பு எப்போதும் தூய்மையாக இருக்கிறது நம்மில் ........இப்போதும் கூட நாம் பயன்படுத்தும் அறிவியல் அறிந்தால் போதும் ......... ஆயகலைகளில் இதுவும் ஒன்றாகத்தான் இருந்தது நமது முட்டாள் மனம் அடுத்தவனின் அறிவை ,அடுத்தவனின் நாகரீகத்தை உள்வாங்கியதால் வந்த வினை ..........எதுவும் அறியாமல் காமசித்திரங்கள் கோயிலில் உள்ள சிலைகளில் பொறித்து வைக்க வேண்டிய கட்டாயம் நமக்கில்லை ...கஜுராஹோ எதற்கு காமத்தை புறகணிக்கவா அல்லது கற்புஅறிவை வளர்த்துகொள்ளவா ......அந்த சிற்பியின் அறிவில் காமத்தை குறித்த உயரிய நோக்கம் அல்லாமல் அவனால் அதை வடிதிருக்கவே முடியாது அவன் தனது காமத்தைத்தான் கலை ஆக்கியுள்ளான் ...........அவனுடைய தலைமுறையின் அறிவுநிலை குறித்து யோசித்திருப்போமா? ..........

ஆக கற்பு என்பது காமத்தின் உயர்நிலை வடிவம் என்று வேண்டுமானால் வைத்துகொள்வோம் ...காமஅறிவு அது குறித்த கல்வி மற்றும் ஆன்மிக கல்வி இரண்டுமே உலகத்துக்கே அவசியம் தேவை அதுவும் போர்க்கால நடவடிக்கையை போல் தேவைபடுகிறது ...ஆன்மிகம் என்றவுடன் மதம் சார்ந்தது என்று நினைத்து விட வேண்டாம் அறிந்திருக்கும்தான் இருப்பினும் கூறினேன் .மதம் அல்லாதது ஆனால் மதம் சார்ந்தது ..........ஒரு குழந்தையை வளர்க்க இருவரின் அறிவு நிலைகள் தேவைபடுகிறது அதற்கும் இந்த கற்பு மொத்தத்தில் சீரமைக்கபட்ட ஆசையும் அறிவும் ஒன்று சேருமானால் குழந்தையின் அறிவானது புதிய பரினாமத்தை எய்தும் ............குழந்தையை இச்சைக்கு பலிஆக்கும் சூழ்நிலையில் இப்போதும் நாம் இருக்கிறோம் இரண்டு நாள் முன்பு கூட குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தையை நாய் குதறி இறந்தாக நாளிதழில் வாசித்திருப்போம் நானும் வாசித்தேன் இங்கு கற்பு குப்பை தொட்டியில் போட்டதா, இச்சை போட்டதா ......அதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லாதது போல் நாம் உச்சு கொட்டி கொண்டிருப்போம் ஹா ஹா ஹா ஆனால் சம்மந்தம் இருக்கிறது அந்த குழந்தையின் சாவுக்கும் இன்றைய கலாச்சார போதைக்கும் சம்மந்தம் இல்லை என்று எதை வைத்து வாதிடுவீர்கள் மன்னிக்க வாதிடுவோம் ..........மரத்தை நடும் பொழுது சந்தோஷம் அடைகிறோம், அதே நமது மனித சந்ததியில் புது பிறப்பை நாம் அளிக்க வேண்டும் என்ற கோணத்தில் காமத்தை பார்த்தால் அதுதான் கற்பு ...புத்தரை மீண்டும் பார்க்கலாம் .வள்ளலாரை மீண்டும் பார்க்கலாம் நான் சொல்வது அவர்களது நகலை அல்ல அவர்களது புத்தியை போன்று புதிய புத்தி உடையவர்களை ........ போலியான உறவுகளால் என்ன பயன் அது ஏன்? என்று இன்றைய நாகரிகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் அதற்கு தண்டனை கொடுக்க மட்டும் தெரியும் தடுத்த நிறுத்தும் வழிகள் தெரியாது கேட்டால் நமக்கென்ன நான் நல்லவன் பா ?என்று ஒதுங்கிகொள்வோம் .......இவ்வளவு சீர்கேட்டை நம்மால் உருவாக்க முடியும் என்றால் ....அதே சமயம் நல்லவற்றையும் எடுத்து சீர்கேட்டை புதுப்பித்து கொள்ளவும் முடியும்தானே ....ஒன்று முடிந்தால் மற்றொன்றும் முடியும் என்றுதானே அர்த்தம் ...........
நான் மற்ற நாகரீகத்தை குறை கூறியதாக தோன்றியிருக்கலாம் ........குறை கூற வில்லை நமக்கு அதனையும் பயன்படுத்த தெரியவில்லை என்பதுதான் என்னுடைய சாடல் .....நமது நாகரீகம் எதுவுமே நமக்கு தெரியாமல் போயிற்றே புதைந்து விட்டதே ....உலகிலயே மிக பெரிய நாகரீகத்தை வடித்து தியானம் வரை சென்று கடவுளுடன் பேசியதாக நம்பபடுவதை எல்லாம் தொலைத்து நாம் என்ன செய்யபோகிறோம் .........வெறும் புறக்கருவிகளை பார்த்து ஏமாந்து வருகிறோம் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது நான் பொடியன் எனக்கே இவ்வளவு வருத்தம் என்றால் பெரியவர்களின் மனதை நினைத்து பாருங்கள் ..............நாகரீக குளறுபடிகளாலும் நமது கற்பு குறித்த அறிவு மறைந்து இருக்கலாம் அதனால்தான் கூறவந்தது
எனது வார்த்தைகள் சில பகிரங்கமாக சாடுவதாக இருக்கலாம் அப்படி இருந்தால் கருத்தை பொதுவில் வையுங்கள் புதரில் பதுங்குவதால் பயன் என்ன தனி விடுகையில் வேண்டாம் ......கோணங்கள் அதிகரிக்கும் அதை விடுத்து என்னை தலைகணம் பிடித்தவன் என்ற சிறையிலோ அல்லது காமுகன் என்ற சிறையிலோ உங்கள் மனதால் என்னை அடைத்துவிடாதீர்கள் ,உங்கள் மனத்தால் என்னை அடைக்காதீர்கள் அர்த்தம் புரிந்திருக்கும் ..............மீள்பார்வைக்கு எப்போதும் நான் தயார் காரணம் நான் வெறும் பகுத்தறிவு கொண்டுமட்டுமே பேசுகிறேன் தர்க்கம் என்னுடையது மேற்கோள் எதுவும் காட்டவில்லை காட்டவேண்டிய அவசியம் எனக்கில்லை ...இதை அவர் சொன்னார் இவர் சொன்னார் வேண்டவே வேண்டாம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் உங்களது அறிவு என்ன சொல்கிறது அதுதான் எனக்கு வேண்டும் காரணம் அதில் பூரண உண்மை இருக்கும் ,,,,,,,,,,,,,படைப்பின் சக்தியை பயன்படுத்துவதில் தவறே இல்லை அதை அழிப்பதில்தான் தவறு அதை தவறாக சித்தரிப்பதில்தான் தவறு ................. கூறிய விஷயங்கள் பாதியே ...........இன்னும் ஊன்றி சொல்ல வேண்டும் என்றால் மேற்கோள் காட்ட நேரிடும் அது எனக்கு தேவை இல்லை நான் புரிந்ததை முன் வைத்தால் போதும் யாரோ புரிந்ததை முன்வைத்து என்னை நானே அவமான படுத்த விரும்பவில்லை ..............

****************************************************************************
நமது தள பானு கே.எல் அவர்களால் கேள்வி பதில் தளத்தில் கேட்கப்பட்ட கேள்வி ,,,,,,,,,அங்கு வைத்திருக்கலாம் ஆனால் பதில் நீளமானது அதனால் இங்கு வைத்தேன் ...............அவருடைய அனுமதி பெற்றுதான் ...........அதற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன் எனது நண்பர் நவீனுக்கும் நன்றி இரண்டு நாள் முன்பு அவர் முன்னிலை படுத்தியதால் எனக்கும் தோன்றியது எழுதிவிட்டேன் ..
எனது கட்டுரையில் குறை இல்லாமல் இருக்காது நான் பொடியன்தானே ஹா ஹா ஹா அனுபவஸ்தன் அல்லவே ஆகையால் தவறுகள் காணப்படும் இருப்பினும் நான் வைத்த கோணம் புதியது என்று மட்டும் சொல்ல முடியும் ............ என்னை சாடுங்கள் தவறே இல்லை ,சாடுவதற்காவது இந்த கட்டுரை உதவுகிறதே என்று சந்தோஷபடுவேன்

என்றும்
அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (17-Apr-13, 11:09 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 406

சிறந்த கட்டுரைகள்

மேலே