பனிக்கூழ் கடிக்கும் அழகியே!(ஐஸ்கிரீம் ருசிக்கும் ஐஸ்கிரீம்!)
பனிக்கூழ் கடிக்கும் அழகியே!
பனிக்கூழை மட்டும் கடி!
அதனை கடிக்கும் போதே
என் மனதையும் கடிக்காதே!
நீ பனிக்கூழ் சாப்பிடுவதை
பார்க்கும்பொழுது
நானும் உண்பதைப் போன்ற பிரமை!
இது கற்பனை இல்லை உண்மை!
உன் ஒவ்வொரு கடிக்கும்
என் இதயம் துடிக்கிறது
சிறிது அதிகமாக
பனிக்கூழின் சில மிச்சங்கள் உன் கன்னத்திலே
உனை நினைத்து சில்மிஷங்கள் என் எண்ணத்திலே
உன்னருகே வந்தவுடன்
என்னைப்போலவே
பனிக்கூழும்
அதிகமாக உருகுகின்றதோ!