குலம் அழிந்து விடும் நினைவில் வை
செதிலாக்கியவனை
செதில் செதிலாகச்
செதுக்கிவிடும்
சிலைகளுக்கு உயிரிருந்தால் ...!
அறுத்தவனை
அறுத்துவிடும்
மரங்களுக்கு உயிரிருந்தால் ....!
கூட்டுக் குஞ்சுகளை
அழித்தவனை
அவன் குடும்பம் அனாதையாகி
அழிந்துவிடும்
குஞ்சுகள் கண்ணீர் விட்டால் ...!
வளரும் கொடிகளை வேரோடு
அழித்தவர்களை
அவன் குடும்பம் வேரோடு
அழிந்து விடும்
கொடிகளுக்கு கோபம் வந்தால் ....!
வளர வாழ குலம் செழிக்க
வளர்த்திடுவோம்
மரங்களை
வாழ்த்திடுவோம்
உயிரினங்களை ....!