எளிமையாய் சில கேள்விகள்,கேள்வி கேட்பது எளிதென்பதால்,,,(ஹுஜ்ஜா)
![](https://eluthu.com/images/loading.gif)
மலர்கள்
யார் நடத்தும்
இலவச உணவகம்
வண்டுகள் வயிறார
உண்டு செல்கின்றன?
***
தேனடை
யார் சுத்தம் செய்வது
தங்கமாய் மின்னுகிறதே
தேனீக்களின் கழிப்பறை?
***
அருவி
எந்தப் பெண்ணின்
வெள்ளை முந்தானை
இப்படி மண்ணில் விழுகிறது?
***
கடல்
ஜீவ நதிகளை
குடித்தும் ஏன்
தாகம் அடங்கவில்லை
இவளுக்கு?
***
மழை
யார் அனுப்புகிறார்கள்
பூமிக் காதலிக்கு
காதல் அம்புகளை?
***
மலை
யார் குத்தி வைத்த
குண்டூசிகள் இவை
நில அடுக்குகள்
நிலை குலையாமல் இருக்க?
***
எரிமலை
யாரின் அஜாக்கிரதை
அடுப்பில் இருந்து
பொங்கி வடிகிறது
குழம்பு?