பார்வையே போர்வையாய். 52

பார்வையே போர்வையாய்.
. . . .

வானமே கூரையாம்.
நடைபாதை வசிப்பிடம்.

உறங்கி கிடக்க
ஓரிடம்.
பகலில் பயணிகளுக்கும்
இரவில் எங்களுக்கும்
புகல்தரும் இல்லிடம்.

பசியில் தாய்தந்தை,

பாவமாய் பிள்ளைகள்,

பருவத்தில் தங்கை,

பக்கத்தில் மணைவி,

காக்கும் வகையிலா
வெக்கத்தில் நான்.

"வானமே கூரையாம்"
நல்லாருக்கே.

"வானமே போர்வையாம்"
இது இன்னும்
நல்லாயிருக்குமே?

பீடியின் துணையுடன்
என் பார்வையே
போர்வையாய்.
பாதுகாப்பாய்
விழித்தபடி.
நான்.


ஜோசப் கிரகரி ரூபன்.
18.04.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (18-Apr-13, 1:48 pm)
பார்வை : 97

மேலே