என் வருங்கால வீடு

என் வருங்கால வீடு
அவ்வபோது
என் வ்ருங்கால வீட்டினை
நினைவு படுத்திவிடும்
சில தருணங்கள்...
என் வீடு
என் பெயரில் எழுதப்படாத
என் பெயர் கொண்ட
என் சொந்த வீடு...
குடிசையோ!
மாளிகையோ!
நான் மட்டும்
வசிக்க போகும் வீடு..
என்னை மட்டும்
ரசிக்க போகும் வீடு..
எவ்வித வறுமையாலும்
விழுங்கமுடியாத வீடு..
என் நினைவுகள்
நான் உலகை பார்க்கும்
சாளரமாகவும்
என்னைப் பற்றிய நினைவுகள்
உலகம் என்னை பார்க்கும்
சாளரமாகவும்
வீட்டில்
அமைக்கப் பட்டிருக்கும்..
வாழ்ந்தவர்கள்
வாழ்கின்ற களத்தில்
வாழப்போகும்
எனக்காய்
வளரப்போகும் தளமது..
இதயத்துடிப்பும்
இடிபோல் கேட்கும் சூழலில்
இவன் இதயம் நின்றப்பின்னே
குடியேரபோகும் வீடது..
தன்னை ஊட்டி
என்னை வளர்த்த மண்ணுக்கு
நான்
என்னை ஊட்டி
விருந்தளிக்க போகும்
பந்தியது..
என் வருங்கால வீடு
என் கல்லறை..
வாழக் கற்றுக்கொண்டிருக்கும் போதே
வாழ்கை முடிந்துவிடுகிறது
அதனால்
கல்லறையிலாவது வாழ முயல்கிறேன்..
என்னோடு சேர்ந்து
என் சிந்தனைகளும்
கல்லறையில் மூடிவிடாமல்
இருக்கட்டும்..
என்
சிந்தனைகளும்
நிபந்தனைகளுமே
கல்லறையை
காவல் காக்கட்டும்..