ஏழைக்குடில்; ஒரு மண்குடில்

#Heavy rain in Chicago April 17&18 2013
கடலோரமாய் நின்ற ஒரு
கிராமத்தில்
மாடி வீடுகளுக்கிடையில்
மறைந்திருந்தது ஒரு மண் மனை
களிமண் பிசைந்து
பிரம்புடன் சேர்த்து
வரித்துக்கட்டினார்களாம்
வயதாகிப்போன அவ்வீட்டை
வான் தோறும் மின் வெட்ட
இடிமுழக்கமும் இரவின்
நிசப்தம் முறிக்க
சோவெனப்பொழிந்தது கடும்மழை
குளிர் கலந்த சிறு காற்று
உரக்கத்திற்கு ஊக்கமருந்தூட்ட
உலகம் உறங்கியது
குறட்டை விட்டு
ஓட்டை கூரையினூடு
மழை நீர் ஒழுக
ஓலைக்குடில் கலாவியது
உறக்கம் கலைந்தது
நாளே நாளு சுவருக்குள்
நாளுபேர் உறங்க
ஓட்டை நோக்கி
ஏக்கத்தோடு பதறி எழ
வெற்றுப்பானை தேடி
நாளு பக்கமும்
நீர் சேர்க்க
கிழக்கும் வெழுத்தது
அப்பானைகள் அடுப்பில்
எரிந்ததை விட
மழை நீரில் நிறந்ததுதான்
அதிகம்....
பசித்த வயிற்றோடும்
பாதி தூக்கத்தோடும்
பள்ளி போகிறது
இரு சிறுசுகள்
ஏன் தாமதம்?
ஏன் பள்ளியில் தூங்குகிறாய்?
பாடப்புத்தகமும்
வீட்டுப்பயிற்சியும் எங்கே?
மற்றவர் பற்றி
எதுவும் உணராத வாத்தி
தாரளமாகத்தந்த பிரம்படிகளோடு
சாப்பிட ஏதும் இருக்குமோ
என்ற ஏக்கத்தோடு
அச்சிறுசுகள்
மாடி வீடுகளையும்
மவுசோடு வாழ்பவர்களையும்
வாய்திறந்து பார்த்தவாறு
வெற்று வயிற்றோடு
வீடு நோக்கி நடைபயில்கின்றனர்....
இதுவொன்றும் புதுமையல்லவே
இன்னொரு நாள்மட்டுமே
இளைப்பதால் பயனில்லை
இழக்கவும் ஏதுமில்லை
இருகால்கள் நடக்கும் தூரம்
இப்பயணம் தொடரும்
இருகைகள் உழைக்கும் வரை
இந்த உயிரும் நிலைக்கும்
#உணர்ச்சி மிக்க கதை மட்டுமல்ல
உண்மைக்கதை கூட