காதலி தெரியுமா உனக்கு ?
நீ நடந்து போகும் காலடி வழியே ,
நான் கடந்து போகும் போதுதான்
உன் காலடி இனிப்பில் உணவருந்தும் எறும்பு
உரக்க உயிர் விடும் போது சொன்னது
என் காலடி பட்டு நசுங்கி
இன்று நான் நாளை நீ !
அப்போது தெரியவில்லை அதன் மொழி
இப்போது புரிந்து போகிறது
கல்லறை தனிமையில் கைநீட்டி என்னிடம் அந்த எறும்பு சொல்வதால்
இனிக்க வாய்த்த உன் காலடியும்
என் இதயம் துடிக்க வாய்த்த இறுதிஉன் சொல்லடியும்
இரு உயிர்களை பறித்து விட்டதடி