நட்புக்குள்ளே !!!!

உறவுகள் இங்கே பல இருக்க…..
நட்புக்குள்ளே கொண்டேன் உறவு இங்கே….!

நான் பிறக்க,
பத்து மாதம் கடன் பெற்றேன்,
தாயின் கருவறையை….!

ஆனால் சுமக்கிறேன் என் நட்பை,,
பல மாதங்கள் எனக்குள்ளே….!!

சிரித்த தருனங்கள் தருகிறது,,
கண்ணீர் துளிகளை….!!

ஒரு பெண்ணின் மேல்,,
மயக்கம் நான்
கொண்ட போது,,
என் தயக்கம் தீர்க்க துணையாய் இருந்த நட்பு….!!
ஒரு பெண்ணால் கண்ணீர் தாங்கி நான் நின்ற போது,,
கரங்களை நீட்டி துடைத்தும் விட்டது…!!

ஆண் தோழன்…!
பெண் தோழி….!
பிரிவில்லை இங்கே….!!

பல காலங்கள்
நான் வாழ நினைக்கவில்லை…!!
ஆனால்
இறந்தாலும் இருப்பதற்கு வரம்
கேட்பேன்,
என் நட்புக்குள்ளே…!!

நட்பே நான்கு ஆண்டுகள்,,
நான் வாழ்ந்த கல்லூரியில்,,
ஏங்கிக்கொண்டிருக்கிறேன்,,
என் இறுதி நாட்களை நோக்கி,,
பிரிவு என்னும் வார்த்தை பிடிக்காமல்

எழுதியவர் : அரவிந்த் .c (21-Apr-13, 11:20 am)
பார்வை : 351

மேலே