கொஞ்சம் நில்லுங்கள், என்னையும் அழைத்து செல்லுங்கள்...
மேகமே மேகமே
மே மாத மேகமே
மேற்கு திசை நோக்கி
எங்கே ஓடுகிறாய்
கொஞ்சம் நில்
என்னையும் அழைத்து செல்
பொய்யான உறவுகளுக்குள்
உண்மையாய் வாழ விருப்பமில்லை...
காற்றே தென்றல் காற்றே
மெதுவாய் எங்கே போகிறாய்
கொஞ்சம் நில்
என்னையும் அழைத்து செல்
சுயநலமிக்க சுற்றத்தாரோடு
சுகமாய் வாழ தெரியவில்லை...
நிலவே வெள்ளை நிலவே
வெண்சிரிப்பை யாருக்காக
உதிர்க்கிறாய்... கொஞ்சம் சொல்
என்னையும் உன்னோடு சேர்த்து கொள்
முகத்தில் புன்னகையும்
உள்ளத்தில் வஞ்சனையும் கொண்ட
மனிதர்களோடு வாழ விருப்பமில்லை...
காகமே கருமை நிற காகமே
எங்கே போகிறாய் சொல்..
கூடி உண்ணும் பழக்கம் கொண்டவனே
பழகிகொள்கிறேன் உன்னோடு வாழ
என்னையும் அழைத்து செல்...
கருணையில்லா கயவர்களோடு
கண்களை மூடிக்கொண்டு வாழ விருப்பமில்லை...
கிளியே பஞ்சவர்ண கிளியே
எங்கே பறந்து செல்கிறாய்
கொஞ்சம் நில்
என்னையும் அழைத்து செல்
கவலையோடும் கண்ணீரோடும்
வாழ விருப்பமில்லை...
யாரவது கொஞ்சம் நில்லுங்கள்
புதியதோர் உலகம் காண
என்னையும் அழைத்து
செல்லுங்கள்......
-PRIYA