மல்லிகை

வெண்மை உன் நிறம்
மென்மை உன் உடல்
வாசம் உன் சுவாசம்
புன்னகை உன் பிறப்பு ........
வெள்ளை மனம் கொண்டால் நீ
கொள்ளை அழகு படைத்தவள் நீ
வண்டினத்தின் வசந்த தோட்டம் நீ
பெண்ணினத்தின் ஆசை உலகம் நீ .....
நீ இல்லாத சபை இல்லை
உன்னை தேடாத ஆள் இல்லை
மயக்கும் மனம் கொண்டவள் நீ
மல்லிகை எனும் பெண்ணே நீ ..........
ஒரு நாள் உன் வாழ்வு
ஊர் போற்றும் உன் சிறப்பு
நெடுங்கொடியில் பிறந்தவள் நீ
நேசம் கொண்ட மல்லிகை நீ .......
வண்டினம் உன்னில் மயங்கும்
பெண்ணினம் உன்னை வணங்கும்
பூவினத்தில் நீ ராணி
நீ புன்னகித்தால் எவரும் காலி .......
ஆண்டவனுக்கும் உன்னை பிடிக்கும்
ஆடவர்க்கும் உன்னை பிடிக்கும்
கவிஞனுக்கும் உன்னை பிடிக்கும்
காற்றுக்கும் உன்னை பிடிக்கும் .......
தென்றல் உன்னை மெல்ல தழுவும்
உரசி காதல் அழகாய் சொல்லும்
உன்மேல் இருக்கும் ஆசையினாலே
உன்னையே சுற்றியே வாசம் பிடிக்கும் .......
நீ இருந்தால் கூந்தல் மணக்கும்
நீ இல்லையேல் பெண்மை வெறுக்கும்
சுமங்கலிகளை நீ அலங்கரித்தாய்
அமங்களிகளை நீ வெறுப்பாய் ......
மெத்தைகள் மேல் வீற்றுப்பாய்
வித்தைகள் பல கற்றவள் நீ
அழகாய் காதலும் சொல்லுவாய்
அன்பாய் காமமும் சொல்லுவாய் ...............
இறைவனையும் அலங்கரிப்பாய்
எங்கும் மனம் வீசிடுவாய்
கண்ணில்லாத குருடர் கூட
உன்னை கண்டிடுவார் வாசனையால் ........
இன்பத்திலும் நீ சிரிப்பாய்
துன்பத்திலும் நீ அழுவாய்
மனிதனோடு வாழ்ந்து கழிந்து
மாண்டிடுவாய் மலரே நீ ......