ரோஜா

வெட்டி நட்ட துண்டு செடி நீ
வளர்ந்து வந்த ரோஜா செடி நீ
கொத்து கொத்தாய் பூக்கள் மொட்டு
பார்த்து ரசித்தது கைகள் தொட்டு .....

அழகான மலர் நீ
அமைதியான மலர் நீ
அழகாய் பிறந்ததாலோ என்னவோ
முற்கள் உனக்கு வேலியாய் ........

காதலுக்கு நீ தூது
காதல் ராணி நீ
பலநிறம் உன் பிறப்பு
புன்னகையோ உன் கவர்ச்சி .......

தேன்கொடுத்தாய் வண்டுகளுக்கு
பூ கொடுத்தாய் எங்களுக்கு
இதயத்திற்கு நெருக்கம் நீ
சில நேரங்களில் அங்கிருந்து வடியும் குருதியும் நீ ..

பார்த்தவர்களை நீ ரசிப்பாய்
பரித்தவர்களை நீ சபிப்பாய்
சிகப்பு நிற உன் மேனி
சிதைக்கும் சிலநேரம் முற்க்களால்.........

தோட்டமாய் அலங்கரிப்பாய்
தூய்மையான மலரே நீ
நீ கண்துயர காரணம் என்ன
காலையில் தினம் கண்ணீரோடு ..........

மொட்டாக மலர்ந்தவள் நீ
பூவாக பூக்கையிலே
உன்னை களவாட காத்திருக்கு
காதலர்கள் கூட்டம் அங்கே .........

எவ்விழா இருந்தபோதும்
வாழ்த்து மலரானாய் நீ
நீ இல்லாத இன்பங்கள் இல்லை
நீ இல்லாத துன்பமும் இல்லை ..........

வாழ்ந்தவரை நான் நீர் தெளித்தேன்
நான் மடிந்த போது பதிலுக்கு
நீ பூதெளித்தாய் "பூவே "
நன்றியோடு ............

எழுதியவர் : வினாயகமுருகன் (21-Apr-13, 6:01 pm)
Tanglish : roja
பார்வை : 1639

மேலே