சூழ்நிலை

கண்ணியம், கனிவு - அது
கடமையாகக்கொண்ட தமிழன்
காசு பணம் வந்த பின்னே
கசக்கி எறியும் தாளாக
கலாசாரக் கோட்பாடுதனை
காலாவதி ஆக்கும் நிலை !!!

பொருளாதார வளர்ச்சி மட்டும்
பொதுவுடைமை ஆகாமல்
பொருள் கொண்ட பேரிடமே - மேலும் பொருள்
பொதிந்து கொள்ளும் பொதுவான நிலை !!!

தன் மகன் கல்வி கற்க
தகப்பன் கோடீஸ்வரன் இல்லையெனில்
தரமென மார் தட்டும் கல்லூரிகள் கூட
தன்னிடம் நெருங்கவிடா தாழ்ந்த நிலை !!!

பணம் கொண்டு பெற்ற கல்வி
குணம் அது குறைத்தாலும்
தனம் அது சேர்க்கும் உத்தி- அது
தினம் காணும் திட நிலை !!!

ஆணின் உடை பெண்ணுக்கும்
பெண்ணின் உடை ஆணுக்கும்
அற்பமாய் மாறிக்கொள்ள
சொற்பமான கலாசாரம்-அது
சோர்வு கொண்ட சோக நிலை !!!

கருணை கனிவு என்பதெல்லாம்
காசு முன் கை கட்டி நிற்க
கருமம் எல்லாம் காசை நோக்கி
உருவம் மாறிய உண்மை நிலை !!!

எழுதியவர் : "கமுதிக்கவி" சௌ.முத்துராஜ (21-Apr-13, 7:37 pm)
Tanglish : sulnilai
பார்வை : 287

மேலே