முகநூல் கவிதை

கடவுசொல்லாய் உன் பெயரை
தட்டி கணினியை உயிர்ப்பிக்கிறேன்...
கணினியின் வெட்பம் சீண்டினாலும்
புன்னகையுடன் உன் புகைப்படம்
என்னை சக்கரையாக கரைக்கும்....!
அன்றைய தினத்தின் கடமையாக
முகநூலினுள் செல்கிறேன்
உன் பேரையே கடவுசொல்லாய் தட்டி...
நண்பர்களின் புது நிலையென பலது
தெரிந்தாலும்- கண்கள் உன் சார்ந்ததே
தேடும்....!!
நண்பர்கள் பட்டியலில் உன்னையும்
சேர்த்தே காட்டி எரிச்சலூட்டும் - அதற்கென்ன தெரியும்
நீ அதற்கும் மேலென......
உன் நிலை புதுபித்திருந்தால்
எனக்கு பித்து பிடிக்கும்....
சாட்டில் நீஎன அந்த பச்சைபுள்ளி
என்னை உலகின் உயரத்தை தொட்ட
சாதகியாக்கும்.....
ஜிமைள் அஞ்சல் ஸ்டார் பெரும்
உன்னை சார்ந்த விவரமாக இருந்தால்....
தேடல்களுக்கு விடை கொடுக்கும் கூகுளே
விழி பிதுங்கி அசடு வழியும்
என் தேடல் புரியாமல்.....
வேலை முடிந்ததென
அணையும் மடிகணினி.....
பத்தொரு நிமிடங்களில் விழிக்கும்
உன் நிலையை அறிய.....

எழுதியவர் : இவள் (22-Apr-13, 3:56 pm)
Tanglish : muganool kavithai
பார்வை : 550

மேலே