தீராத தீவிரவாதம்......

மண்ணில் விதைத்தது யார்?
மமதை கொண்டது யார்?
பாதகம் விளைத்தது யார்?
பாசம் கொண்ட நெஞ்சினிலே...
பெற்றெடுத்த கோளமகள்
பாலூட்டி வளர்க்கும் மகள்
பாங்கினை எண்ணி பார்ப்பாயோ....
பாமரன் நமது உறவென்றே
பண்போடு வளர்ந்திருந்தால்.....
பாசம் எங்கே போனதடா!
பாகம் கேட்க தோன்றுமாடா?
பஞ்சம், பஞ்சனை இவ்விரண்டில்.....
பக்கம் கொண்டது எவ்வொன்று
பாரிடம் நேசமென்று
பார்க்காதே வெறிக்கொண்டு
பாய்ந்திடுமே குருதிபுனல் இன்று
பங்கம் விளைந்திடுமே வெடிகொண்டு
பறிப்பது யாரோ? அறுப்பது யாரோ?
தீருமோ தீராத தீவிரம்.....

எழுதியவர் : Loka (23-Apr-13, 9:19 am)
பார்வை : 111

மேலே