புதுதில்லி எரிகவே!!!

விலை மகளீன்ற தலை மகனும்
விலைதந்து வேறோரு விலை மகளிடம்
விரும்பி போய் பெற்றெடுத்து வந்த
விலைமகளின் வாரிசு அந்த மிருகமோ!

காமத் தீ மூளை பற்றி யெரிய
மது நெய் மேலும் அதிலூற்ற
மாந் தளிரிலையை கிள்ளி யெரித்த
காம அரக்கன் இவன் தானோ!

அன்னை அப்பன் அன்பு முத்தத்தில்
ஆணந்தமாய் பாடுமந்த குயில் குஞ்சின்
குரல்வளை கடித்த குரங்கின் இனத்தை
ஒருங்கு கூடி மக்களே தண்டிப்பாயோ!

சுடா மண் பானையாக காவல்துறை
விடாமல் பாயும் வெள்ளபணத்தில் கரைந்தோட
சூடு பட்ட குருட்டு பூனையாக நீதி
ஒற்றை சுவர் மீதிருந்து தாவும் திசை யாரரிவாரோ!

பூவாய் மலருமிந்த சிறு அரும்பை
கறந்த பாலினும் தூய்மையான பேதையை
பெற்றவளாக யென்னை யான் யெண்ணிக்கொள்ள
கண்ணகி நானாயின் புதுதில்லி எரிகவே!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (23-Apr-13, 11:09 am)
சேர்த்தது : siva71
பார்வை : 79

மேலே