...............மழலைத்தொழிலாளி..............

கல்லுடைக்கிறாள் மண் சுமக்கிறாள்,
கட்டிடவேலை நீர் இறைக்கிறாள் !
கூவிவிற்கிறான் பரிமாறி நிற்கிறான்,
ஓடியாடி எடுபிடியும் ஆகிறான் !
பள்ளி செல்வதை மறந்துபோய்விட்ட,
தெளிவு வராத சிறுமியும் சிறுவனும் !
பால்குடி மறந்த சிலவருடத்தில்,
தேள்கடியாக நாட்கள் மாறினார் !
பண்டங்கள் எது தின்றாலும்,
அங்கே ஒரு மழலை பார்த்தால்,
உடனேயே அள்ளித் தந்திடும்,
தன்மைகள் வளர்த்த கரங்கள் !
தமதாக கொண்டதுதானே,
இதுவரையிலும் எங்களின் மனங்கள் !
ஆனால்,
விளையாடும் மழலைக்கூட்டம்,
வியர்வையைத்துடைக்கும் அவலம் !
வெயில் மழையுடன் போராடித்தான்,
வெரும்கால்கல் நிறைக்கும் கவளம் !
மாலை வரும் கூலிக்காக,
காலைவரும் முன்னர் எழுந்து,
கவனங்கள் தொலைக்கும் பிறவிகள் !
காலம்வரும் என்றேகூட,
காத்திருக்கத் தெரியா உறவுகள் !
வயதுக்குமீறிய சுமைகளை,
ஏற்கின்ற மெல்லிய விரல்கள் !
கண்டதும் எம்பிகுதிக்கும்,
இமைகளை உடைக்கும் திரள்கள் !
ஆகவே பொறுமைகாட்டு,
அன்பினில் வளர்ந்த மனிதா !
அழித்திட முற்படுகின்றாய்,
வளராத ரேகைகள்தம்மை !
தெரிந்தே ஏன் சிதைக்கிறாய் நீ?
நடைபயிலும் பாதைகள்தம்மை !
உற்று நோக்கிடின் எங்கெங்கினிலும்,
திரிந்தபடியே உழைக்கும் மழலைகள் !
கந்தலாடை தந்தே சிலைகளை,
சிதைப்பதென்ன உந்தன் கயமைகள் !
தவறு குற்றம் என்றே சொல்லி,
விலகி ஓடும் உங்கள் கொடுமைகள் !
பாவம் சாபம் என்பதை உணர்ந்தும்,
பாதகங்கள் செய்யும் எருமைகள் !
வளைக்காதே வானவில்களை !
உடைக்காதே குருத்தெலும்புகளை !
சிதைகாதே சின்னக் கடவுள்களை !
படைக்காதே பாவப் பூமியை !
மழலையிடம் மழலை ஆகு !
மடியினிலே விடியல் தேடு !
நிம்மதியை அவரிடம் நாடு !
அவர் வளர நீயும் ஓடு !
மழலைகள் வார்த்திடும் தன்னை !
வருங்காலம் வாழ்த்திடும் உன்னை !

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (24-Apr-13, 8:01 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 64

மேலே