தத்துவம்

பெற்ற மகளை
பாரம் என
நினைப்பவன்!

வரதட்ச்சனை வேண்டவே
ஆண்மகன் வரம்
கேட்பவன்!

ஈன்றெடுத்தவர்களை தாளாத
சோகத்தில் தள்ளியவன்!

கட்டிய மனைவியை
மிருகமென பாவிப்பவன்!

அகத்தில் பகை
முகத்தில் நட்பு
கொண்டவன்!

கற்பிக்கும் ஆசிரியரை
மதிக்க தெரியாதவன்!

பிற உயிர்களை
நேசிக்க தெரியாதவன்!

இவர்கள் அனைவரும்
கடவுளை பகைத்து
சாபம் வேண்டியே
தவமிருந்து முடிவில்லா
சோக நரகநெருப்பில்
தெரிந்தே குதிப்பவர்கள் ஆவர்!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (25-Apr-13, 2:56 pm)
பார்வை : 254

மேலே