தனி குடும்பம்
உழைத்து தேய்ந்த அப்பா
ஆறுதல் துணை தேடி அம்மா
வாழக்கை துணை தேடும் பிள்ளை
கண்ணுக்கு நிரையாய் மருமகளை
தேடும் குடும்பம் .......
தேடி அலைந்தனர் மருமகளுக்கு
ஒருத்தி கருத்தும் ஒருத்தி பருத்தும்
ஒருத்தி வயதை தாண்டியும்
இறுதியில் கிடைத்தால் மருமகள்
இல்லை இல்லை
இவர்களுக்கு மகள் .......
பொங்கும் சந்தோஷத்தில்
பெற்றவர்கள் சந்தோஷத்தில் மிதக்க ............
நமக்கொரு மகள் வருவாள்
மனைவிக்கு உதவி புரிவாள்
செத்து போன நாக்கிற்கு
புத்தம் புது உணவு கொடுத்து
புத்துயிர் கொடுப்பாலென கனவில் மாமனார் .....
வயசாகிப்போச்சு
ஒத்தாசைக்கு ஆள் வந்தாச்சு
நமக்கு ஒய்வு கொடுக்க
மருமாள் வருவாளென்று
மாமியார் காத்திருக்க ........
நமக்கொரு துணை வருவாள்
நம்முடையே நிலை புரிவாள்
அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்
ஆசையாய் பனி செய்திடுவாலேன
நினைப்பில் மணமகனும் காத்திருக்க ......
தடபுடலாய் நடந்தேறியது திருமணம்
வந்ததும் வராததுமாய் மணமகள்
தாய் வீட்டு சீரோடு
கொண்டுவந்தால் ஒரு குண்டு
"தனி குடித்தனம் "..........
அவள் அடம்பிடித்து அழ
இவர்கள் ஆதரவுக்காக அழ
எடுத்து சொல்ல பிள்ளை முயன்றும்
ஜெயித்தது மனமகளே .............
தலையில் இடி விழுந்தமாதிரி
அப்பனும் ஆத்தாளும் கண் கலங்க
எல்லா கனவுகளையும்
பொடிப்பொடியாய் ஆக
நிர்கதியாய் நின்றார்கள் பெற்றவர்கள் ......
கெஞ்சி பார்த்தும்
அவள் காதில் ஏறாததால்
சீரோடு பறந்தால் அவள்
வேறோடு நிம்மதியை பறித்து ......
தனிக்குடித்தன கலாசாரம்
இன்று பெற்றவர்களை
தனிக்குடித்தனமாய் விட்டு பறக்கிறது
ஒவ்வொரு வீட்டிலும் .....