வற்றாத சொந்தங்கள்!

கோபம் கொள்ளும்போதும்
குமுறும் எரிமலைகளும்
கொப்பபளிக்கும் தீயினை..
அப்புறமது அடங்கும்போதும்
ஆறவிடும் பிளம்பினை

தீயும் பிளம்புங்கூட
தேடினால் கவிதையாகும்.
கவிஞர்களும் அப்படித்தான்
கருத்து மோதல்களில்
கவிதைகளாய் பொங்குவார்.

கோபமுள்ள படைப்புக்களும்
சாபமில்லாப் பகிர்வுகளும்
அனல்கக்கிப் பாய்ந்தாலும
அடங்கிவிடும் ஆறிவிடும்
அறிவுசார் சர்சசையெல்லாம்.

கவிஞர்கள் கருத்தாளிகள்
கருத்துபேதம் சகசந்தான்
சத்தமான பேச்செல்லாம்
இரத்தம் விடும் மூச்சுதான்
வற்றுமோ சொந்தங்களும்!

சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா. (26-Apr-13, 8:18 pm)
பார்வை : 135

மேலே