சந்திப்பு

சரவணனுக்கு தலை, கால் புரியாத மகிழ்ச்சி. காரணம் சங்கீதா, அவனை காபி குடிக்க மாலை 5 மணிக்கு சரவண பவனுக்கு வரச் சொல்லி இருந்தாள்.
இருவரும் ஹோட்டலில் சந்தித்தனர். சங்கீதா இரண்டு காபி கொண்டு வரும்படி சர்வரிடம் சொன்னாள்.
சரவணனிடம் தன்னுடைய கல்யாணப் பத்திரிக்கையை நீட்டினாள் சங்கீதா.
"யாருக்கு கல்யாணம்?" குழப்பத்துடன் கேட்டான் சரவணன்.
"எனக்குத்தான். அடுத்த மாதம் 10-ம் தேதி பல்லாவரத்தில் கல்யாணம். நான் உங்களை இங்கே வரச் சொன்னதின் நோக்கமே, இனிமேல் தயவு செஞ்சி பஸ் ஸ்டாண்டில் என்னைப் பார்த்து அசட்டுத் தனமா சிரிக்க வேணாம்னு சொல்லத்தான். யாராவது பார்த்தா தப்பா நெனைப்பாங்க"
சரவணன் இறால் மீனைப்போல சுருண்டு போனான். பேச வார்த்தையே வரவில்லை.

எழுதியவர் : சி.பி.ராஜு (26-Apr-13, 9:29 pm)
சேர்த்தது : C.B. Raju
பார்வை : 181

மேலே