கல்யாணத்துக்கு அப்புறம் காதல்....?

கல்யாணத்துக்கு அப்புறம் காதல்....?

கன்னத்தை தடவிக்கிட்டே kitchen நோக்கி போனா காயத்ரி...
போனவ கார்த்தி காதுல விழுற மாதிரியே சொல்லிட்டு போற உன்ன கல்யாணம் பண்ணிட்டு என்ன சொகத்தை கண்டேன்னு. கிட்சனுக்குள்ள போனவ கதவ சாத்திட்டா... இந்த கார்த்தி அவளோட கணவன் தான்.... இல்ல காதலன். இப்போ காபி ல சர்க்கரை இல்லன்னு தான் அவள கன்னத்துல அறைந்சுட்டான். ரெண்டு பேரும் final year படிக்கும் போது தான் இருவருக்கும் லவ் மலர்ந்தது... எத்தனையோ பேரு love வ சொல்லியும் கேக்காதவ கார்த்தி சொன்ன உடனே ஓகே சொல்லிட்ட. அவனும் பாக்க அழகா வாட்ட சாட்ட இருப்பான். அவ கொஞ்சம் குள்ளமா இருந்தாலும் அழகுல குறஞ்ச்சவ இல்ல... அவ கொஞ்சம் திமிரும் பிடிவாதமும் பிடிச்சவ. ரெண்டு பேரும் படிப்பு முடிச்சு வேற வேற கம்பெனில வேலை செஞ்சாலும் லவ் நல்லபடிவே போயிட்டு இருந்தது... அவ வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க. அப்போ அவ தான் ஒருத்தனை லவ் பன்றத சொன்னா. ஆனா அவங்க family அத ஏத்துக்காம அவன கல்யாணம் பற்றதா இருந்தா நீ இப்பவே வீட்ட விட்டு போய்டுன்னு சொல்லிட்டாங்க.. அவளும் வெளியே வந்து கார்த்திக்கு போன் பண்ணி நடந்தத சொல்லி அழுதா. கார்த்தி அங்க வந்து அவல ஒரு ladies home ல தங்க வச்சுட்டு நாளைக்கு நமக்கு கல்யாணம் நா அந்த ஏற்பாடு பன்றேன்னு சொல்லிட்டு போய்ட்டான்... போய் freinds எல்லாம் கால் பண்ணி அடுத்த நாள் கல்யாணம் முடிச்சு ஒரு appartment ல third floor ல குடி ஏறுனாங்க... ரொம்ப சந்தோசமா போய்ச்சு வாழ்க்கை ஒரு 3 வருஷம் . அதுக்கு அப்புறமாதான் பிரச்சனையே வர ஆரம்பித்தது. கல்யாணம் ஆகி 3 வருஷம் முடிந்தும் குழந்தை இல்லன்னு இருவருக்கும் மனவருத்தம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி இப்போ ஒரு காபி ல சக்கரை இல்லன்னா கூட அது சண்டைல பொய் முடியுது... kitchen ல இருந்து gas smell வர்றத பாத்து மெல்ல எழும் போது அங்கு cylider வெடிச்சு கதவு ஒடஞ்சு அவளோட இதயம் அவன் காலுக்கு அடியில வந்து துடிக்குது. அத ஒரு செகண்ட் பாத்தா கார்த்தி அக்கிருந்து ஓடி போய் கீழே குதிச்சுட்டான் 3 வது floor ல இருந்து குதிச்சதால தலை அடிபட்டு மூளை வெளியே வந்துடுச்சு. அங்க இதயமும் இங்க மூளையும் கொஞ்ச நேரம் துடிச்சுட்டு இறந்து போச்சு....

காதலிக்கிறது தப்பில்லை... ஆனா கல்யாணத்துக்கு அப்புறமா காதல கொன்னுப் புடாதிங்க...

எழுதியவர் : சிவானந்தம் (26-Apr-13, 11:59 pm)
சேர்த்தது : சிவானந்தம்
பார்வை : 384

மேலே