உரக்க சொல்கிறேன் உறங்காது உண்மை ,,,,,,,,

வாய் பிளந்து
வாதாடுகிறான்
வைத்து விடு பணமென்று
அநீதி தெரிந்து
அனைத்தையும் மறைத்து
நீதி கேட்டு
நிமிடத்தில் முடிக்கிறேன் என்று
நிலைகொள்கிறான்,,,,,
சட்டத்தை கையில் எடுத்து
சாடுகிறான் சரி என்று
சட்டத்தரணி ,,,,,,

மாறாக ஒருகையில்
தராசு மறு கையில்
பூ மாலை கொடுத்து விட்டு
கொடூரத்தையும்
உண்மை என்று வாதாடு ,,,,,,,
உன் வருவாய்க்கு ,,,,,,,,,

நீதி தேவை
கண்ணில் கறுப்பு
துணியால் மறைப்பு போட்டு
தாராசு ஒரு கையிலும்
மறுகையில்
வாளும் ஏந்தி உறங்குகிறாளா?இல்லை
நீதியே நான் என்று
நிமிந்து நிற்கிறாள் .....
ம்ம்ம் எதற்க்கு ?
நீதிக்கா??அநீதிக்கா???

புதைக்கின்றாய் நீதியை
புனைகின்ற உன்
பொய்களால்
உறங்காது உண்மை
உணர்ந்து விடு ,,,,,,,,
உரக்க சொல்கிறேன்
உறங்காது உண்மை ,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (27-Apr-13, 1:05 am)
பார்வை : 169

சிறந்த கவிதைகள்

மேலே