ஏழைசாதி நான் - என்னுள் சில ஆசைகள்
ஏழை சாதி நான்
என்னுள் சில ஆசைகள்
பஞ்சு மெத்தையில்
படுத்துறங்கி
மெத்தை காபி
குடிக்க ஆசை
தங்க தட்டில்
உணவை இட்டு
மூன்று வேலையும்
முழுதாய் உண்ண ஆசை
மூன்றாம் தளத்தின்
மாடியில் நின்று
என் வீடு என்ற கர்வத்தோடு
இயற்க்கையை இரசிக்க ஆசை
குளிர்சாதன கருவி பொருத்திய
சிவப்பு வண்ண காரில்
பயணம் செய்ய ஆசை
கிழிந்திடாத ஆடைகளை
உடுத்தி கொள்ள ஆசை
நவீன குளியல் அறையில்
குளித்து விட ஆசை
இவை எல்லாம்
என் நிறைவேறா ஆசைகள்
கனவிலாவது நிறைவேறுமா?
என் நிகழ்கால ஆசைகள்...