சிந்தனை சிறகு
சிந்தனை சிறகே வா -என்னுள்
எந்தன் சிந்தனை சிறகே வா
சீராக்கி எம்மை சிந்திக்க செய்ய
சிகரத்தை எம்மை சந்திக்க செய்ய
வஞ்சனையின்றி வர்ணிக்க செய்ய
வந்து போவதை வஞ்சிக்க செய்ய
ஏக்கங்களை என்னுள் பிரதிபலிக்க
எண்ணங்களை என்னுள் செயலாக்க
தூக்கத்தை என்னிலிருந்து துரத்திவிட
துன்பத்தை என்னை விட்டு தூக்கிலிட
மனதை மயிலிறகால் வருடிவிட
மரணத்தை மதயானை கொண்டு மிதித்துவிட
அன்பர்களை அவர்பால் அரவணைத்துச் செல்ல
ஆசைகளை அளவாய் அடுக்கிச் செல்ல
எந்தன் குணத்தை கோபுரமாக்கி விட
என்னில் எழும் கோபத்தை குப்பையாக்கி விட
என்னுள் எழும் எண்ணத்தை எழுத்தாக்கிட
யாவர்க்கும் எம் எழுத்து பயனாகிட
சிந்தனை சிறகே வா - என்னுள்
எந்தன் சிந்தனை சிறகே வா