நாய் குட்டி மனம்:-

ஒற்றை பார்வை வீசி யதில்
ஒரு கோடி அர்த்தம் வைத்து
கற்றை குழல் காரி செல்கையில்
நாய் குட்டியாய் மனம் பின்னோடுதடா!

இயற்தமிழின் சொந்தக் காரி அவள்
இசைத்தமிழ் பேச்சுக் காரி அவளின்
நாடகத்தமிழை ரசித்து பார்க்க நளும்
நாய் குட்டியாய் மனம் பின்னோடுதடா!

முல்லை அரும்பு பற்கள் காரி
முழு மதியின் முகத்து காரி
அவ ளெழுதும் தமிழெழுத்து காண
நாய் குட்டியாய் மனம் பின்னோடுதடா!

சிந்தும் விழி பார்வை சிந்தும்
சந்தம் ஒரு கோடி அதை
சொந்தமாக்கி வைத்து கொள்ள நாளும்
நாய் குட்டியாய் மனம் பின்னோடுதடா!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (27-Apr-13, 2:32 pm)
பார்வை : 164

மேலே