நான் ஒரு கருப்பு ரோஜா

கடமை தவறிய அப்பா
ஒழுக்கம் தவறிய அம்மா
பிறப்பில் தவறி நான்
பெண்ணானேன் ...........

வளமை தவறிய வறுமை
அக்கறை தவறிய வளர்ப்பு
நேர்மை தவறிய பார்வை
நெஞ்சே கதறும் சோகம் ...........

முறைகள் தவறிய உறவுகள்
நெறிகள் தவறிய பேச்சுக்கள்
கருணை தவறிய கொடுமை
கண்டது எந்தன் வாழ்க்கை ..........

இளமை தவறிய முதுமை
இன்பம் தவறிய துன்பம்
பசிக்கு தவறிய கற்ப்பு
காயப்பட்ட மனமும் உடலும் .......

பகலுக்கு தவறிய இரவு
பாதுகாக்க தவறிய பெண்மை
மென்மைக்கு தவறிய வன்மை
மனிதனில் தவறிய மிருகம் .......

பெண்ணாய் இருந்தும் பொம்மையானேன்
ஏனோ நான் பெண்ணானேன்
எவரின் கைபடும் பொருளானேன்
யாவரின் உடல் தாங்கும் மெத்தையானேன்.........

எழுதியவர் : வினாயகமுருகன் (28-Apr-13, 8:34 am)
பார்வை : 122

மேலே