சண்டை!

அவன் கிழக்கே பார்த்தான்!
அவள் மேற்கே பார்த்தாள்!
அவன் உண்டு முடித்தான்!
அவள் உண்ண அமர்ந்தாள்!
அவன் வெளியே கிளம்பினான்!
அவள் உள்ளே வந்தாள்!
அவன் உறங்கி எழுந்தான்!
அவள் உறங்க விரைந்தாள்!
இவ்வாறாக‌
அவனின் அவளின்
அன்றைய பொழுது
இனிதே கழிந்தது!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Apr-13, 6:15 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 109

மேலே