நம்பிக்கையோடு விழித்துப்பார் நாளை உனதே !!!

விதியென்று விழிமூடி
காத்திருக்கும் எண்ணங்களே
விடையொன்று வேண்டி
வீதியிலே எட்டிப்பாருங்கள் ....

கற்பனை இழந்த கண்ணறுத்து
விற்பனைக்கு அனுப்புங்கள்;
சொப்பனங்கள் கூட மெட்டு போடும்
சோகத்தை எட்டி தள்ளுங்கள்

சந்தோஷ காட்சியெல்லாம் இயற்கையாம்
சங்கடங்கள் மட்டுமெதற்க்கு செயற்கையாய்

உளிகூட உபத்திரம் தான்
சிலையாகும் கல்லுக்கு
வலிகூட வைத்தியம் தான்
வழிதேடும் வாழ்கைக்கு

நிலாகூட தேய்ந்து மடிகிறது
நிழல்கூட சிறுத்து போகிறது
மீண்டும் கொடிபற்றி வளர்கிறது
நித்தமும் நடக்கும் நிலையிதுவே

மரம்கூட பாரமென்று
இலையை உதிர்க்கும்
மகிழ்ந்தே அதனை
தலையில் தாங்கும்

மழைகூட வீழாமல் மண்ணதனை
எரித்துச்செல்லும்
மறுபடியும் விரும்பி வந்து
ஏற்றுக் கொள்ளும்

பற்றொன்று வைத்து பாரினிலே பறந்துவா
சட்டென்று நீயும் சாதனை படைப்பாய்

மன்னனென்றும் தொண்டனென்றும்
ஆடும் ஆட்டமெல்லாம் -ஆட்டம் முடிந்துவிடில்
அடங்கிவிடும் ஒரு பெட்டியில்

சாதனை மனிதனே
வேதனை தகர்த்து வெளியே வா
தாங்கும் கரங்கள் பல்லாயிரம்
தளத்தில் உண்டு ..

நம்பிக்கையோடு விழித்துப்பார்
நாளை உனதே !!!

எழுதியவர் : bhanukl (29-Apr-13, 7:32 am)
பார்வை : 1226

மேலே