மகேஷ்-வோட அப்பா...

கடைசி வரைக்கு போராடி எங்களால உங்க பையனோட உயிரை காப்பாத்த முடியல "I am sorry " இன்னு சொல்லிட்டு போயிட்டாரு டாக்டர். இதுவரை என்ன நடக்குதுன்னு ஜன்னல் வழியா எட்டி பார்த்த மகேஷ்வோட அப்பா இப்போ நெஞ்ச புடிச்சுகிட்டே கீழ உக்காருறார். தன் பையன ஒரு sceintist ஆக்கி பாக்கனும்கிற ஆசையில கடைசியா இப்போ மண்ணு விழுந்துருச்சு.மகேஷும் நல்ல பையன தான் நல்ல சுட்டி... படிப்புல பயங்கர கெட்டி. தண்ணி, தம்முன்னு எந்த கேட்ட பழக்கமும் இல்ல. நேத்து night freind பர்த்டே பார்ட்டிக்கு போறேன்னு சொல்லிட்டு போனான் மகேஷ். அப்பாவும் பத்திரமா போயிட்டு வாடான்னு சொல்லி அனுப்பி வச்சார். மகேஷ்வோட friend சிவாவுக்கு தான் பர்த்டே... பாண்டிச்சேரி போகலாம்ன்னு முடிவு பண்ணி, நேத்து night சென்னைல இருந்து கிளம்பி போனாங்க. மொத்தம் 6 பேரு 3 வண்டியில. பாண்டிச்சேரி போறதுக்கு முன்னாடியே மகாபலிபுரத்துல வண்டியே நிறுத்தி ஆளுக்கு ஒரு குவாட்டர் அடிச்சுட்டு போகலாம்முனு முடிவு பண்ணி சரக்கு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க... ஆனா மகேஷுக்கு அந்த பழக்கம் கிடையாது... அவன் சரக்கு அடிக்கல... முடிச்சுட்டு அங்கிருந்து கிளம்பி போகும் போது. சிவாவோட வண்டியில தான் மகேஷ் இருந்தான். சிவா வண்டிய வேகமாக ஓட்டிட்டு இருக்கும் போது ஒரு Speed Break வந்துச்சு. ஆனா அத சிவா கவனிக்கல. வேகமா போன வண்டி ,Speed Break -ல ஏறவும் சரிக்கிட்டு வண்டி விழுந்துருச்சு... சிவாவுக்கு சில சிராப்பு மட்டும் தான் ஆனா ரத்தம் வழிஞ்சுட்டு இருந்துச்சு. மகேஷுக்கு உடம்புல காயம் ஏதுமில்ல. விழுந்தவன் எழுந்துட்டான்... ஆனா தலைய எதோ பண்ணுன்னு சொல்லிட்டு மயங்கி விழுந்துட்டான்... அங்கிருந்து 108 க்கு போன் பண்ணி பக்கத்துல இருக்குற hospital -க்கு கொண்டுட்டு போனாங்க. இப்போ அப்பா அம்மாவுக்கு தகவல் சொல்லி எல்லோரும் அந்த hospital -க்கு வந்துட்டாங்க. ICU - ல அட்மிட் பண்ண மகேஷ்வோட தலைய ஸ்கேன் பண்ணதுல மூளை அடிபட்டு, சிதைந்து போயிருக்கு. 12 மணி நேரம் போனாத்தான் ஏதும் சொல்ல முடியும்ன்னு டாக்டர் சொல்லிட்டாங்க... நெஞ்ச புடிச்சுட்டு உக்காந்த மகேஷ் அப்பாவ ஒரு nurse வந்து உங்களை டாக்டர் வர சொன்னாருன்னு சொல்லி கூட்டிட்டு போற ... அங்க டாக்டர் அவரு பையன் இறந்ததற்கு வருந்துவதாவும், நீங்க நெனச்ச உங்க பையன இன்னும் வாழ வைக்கலாம் அவனோட உறுப்புகளை தானம் பண்ணி அப்படின்னு சொல்லி ஒரு form தந்து கையெழுத்து போடா சொன்னார் ... ஒரு நிமிஷம் டாக்டரை பாத்துட்டு "Body Donation Form" ல sign பண்ணிட்டு... எழுத்து போய் சும்மா இருந்த chair -ல தலைய தொங்க போட்டுட்டே உக்காந்துட்டார் மகேஷ்-வோட அப்பா....

எழுதியவர் : சிவானந்தம் (29-Apr-13, 3:07 pm)
சேர்த்தது : சிவானந்தம்
பார்வை : 192

மேலே