என்னை எள்ளி நகையாடு...

நீ
கடுகென வெடிக்கும்
முகம் காட்டி
என்னைச்
சுடும்போதெல்லாம்
சூளையில் உள்ள
கல்லாய்;
செங்கல்லாய்
என்னைத்
திடம் செய்துக் கொள்கிறேன்...
கேலியாய்
நீ சிந்தும் சிரிப்பு,
ஒருபோதும்
வேலியாய்;
என் முன்னேற்றத்தின்
வேலியாய்
இருந்துவிடப் போவதில்லை...
ஒன்றை மட்டும் நினைவில் கொள்!!!
எள்ளளவு அன்று;
கொள்ளளவு மிகுந்த
உன் ஏளனம்
கொண்டு
கொள்முதல் செய்வேன்
கொம்பன் எவனும்
கண்டிராத
வெற்றிக்கனியை...
எவ்வாறெனில்,
நீ
வீசும்
ஏளனப் பார்வைகள்
ஒவ்வொன்றும்
எனக்கு
ஏணிப்படியே!!!
எனவே,
எள்ளி நகையாடு...
என்னை எள்ளி நகையாடு...
என்றும்
என்னை எள்ளி நகையாடு...