கடினம்
நன்மை செய்வது கடினம்.
தீமை செய்வது சுலபம்.
சுலபத்தை
பார்ப்பவன்
அறிவு இல்லாதவன்.
கடினத்தை ஏற்பவன்
அறிவில் ஆதவன்.
உழைப்பின்றி
ஊதியம் கேட்பவன்
பிச்சைக்காரன்.
உழைத்து பின்
ஊதியம் கேட்பவன்
உழைப்பாளி.
பலன்கருதாமல்
பாடுபட்டேன்
என்பவன் எத்தன்.இதை
அறிந்தவன் சித்தன்.
அறியாதவன்
பித்தன்.