சுதந்திரமும் அரசியலும் -- பகுதி 2

பாட்டெழுதி பிழைப்பு நடத்தி
புகழ் சேர்த்து,

அந்தப் புகழ் மூலம்
மக்கள் படை திரட்டி

ஆங்கிலேயனை விரட்ட
நடத்தினர் போராட்டம்
அன்று.

சுதந்திரம் பெற்றோம்
அந்நிய ஆட்சியில் இருந்து!

பெற வேண்டிய சுதந்திரத்திற்காக
அரசியல் நடந்தது
அன்று!

அரசியல் - அரசு அமைக்கும் இயல்பு

தம் மக்கள், தம் நாடு, தம் ஆட்சி
அமைய வேண்டிய போராட்டத்தில்

சுய உணர்வை ஏற்படுத்த
சொல்லிக்குடுத்த வார்த்தைகள்

"இது எனது மண், என் நாடு,
இவர்கள் என் மக்கள்"

எழுச்சி தந்தன இவை
வெகு மக்களிடம்,

சுதந்திரம் பெற்றோம்
அடிமை நிலை மாறி.

சுதந்திரம் என்பது சுய ஆட்சி
இலக்கணம் தந்தனர்
போராளித் தலைவர்கள்.

சுதந்திரம் பெற்றும்
கொண்டோம்
அடிமை சாசன நிர்வாகம்

வழி மொழிந்தார்கள்
வார்த்தைகளை
என் அரசியல்வாதிகள்.

"இது எனது மண், என் தேசம்,
இவர்கள் என் மக்கள்"
என் சுதந்திர இந்தியாவில்

இவர்களின் புரிதல்

எனது மண்.
சொன்னார்கள்--

வாங்கிய சொத்தாக ஏக்கரில்
பல்லாயிரக்கணக்கில்
சொந்த கணக்கில் ஏற்றி!

என் தேசம்
சொன்னார்கள்----

ஊழல் எனும்
புதுக்கருவி கொண்டு
அனைத்து வளங்களையும்
தமதாக்கிக் கொண்டே

அனைத்தும் எனக்கே சொந்தம்

என் மக்கள்
சொன்னார்கள் ---

கொண்டனர் தமக்கே முன்னுரிமை

உரிமை கேட்கும் மக்களை
உரிமையோடு புறந்தள்ள

எனது மண், என் தேசம்,
என் மக்கள்---
புது இலக்கணம் தந்தனர்
சுதந்திரம் பெற்ற

என் சுதந்திர அரசியல்வாதிகள்

பெற்ற சுதந்திரத்தில்
அரசியல் நடக்கிறது
சுதந்திரமாக
இன்று

சுதந்திரம் பெற்றோம்
அரசியல் நடத்த மட்டுமே!!

எழுதியவர் : மங்காத்தா (30-Apr-13, 10:23 am)
பார்வை : 82

மேலே