கற்றுகொள்...!

உயரத்திலிருந்து விழுந்து
வளைவுகளில் மோதினாலும்
விடாமல் ஓடும் ஆற்றிடமிருந்து
உன் வாழ்க்கையில் ஏற்படும்
துன்பத்தை சகிக்க
கற்றுக்கொள்!
வாழ்க்கையில்
இன்ப துன்பங்களுக்கு வளைந்து
கொடுப்பதை மூங்கில்களிடமிருந்து
கற்றுக்கொள்!
விழுந்தும் எழும்
தன்னம்பிக்கையான செயலை
அலைகளிடமிருந்து
கற்றுக்கொள்!
தன்னிடம் சிறிது இருந்தாலும்
பிறர்க்கு கொடுத்து உண்ண வேண்டும் என்பதை காக்கையிடமிருந்து
கற்றுக்கொள்!
நீ பார்ப்பனவற்றில்
நல்லவைத் தீயவைகளை
பகுத்து நல்லவற்றையே
எடுப்பதை பாலையும் பகுத்து
பாலை மட்டும்
அருந்தும்
அன்னப்பறவையிடமிருந்து
கற்றுக்கொள்!
ஒற்றுமையாக உழைத்து
வெற்றிபெறும் கூட்டுமுயற்ச்சியை
எறும்புகளிடமிருந்து
கற்றுக்கொள்!
நீ தினமும் அதை அணிந்து
உன் எடையால் அது தேய்ந்தாலும்
முள் கல் உன் கால்களில் படாமல்
பாதுகாக்கும் செருப்பிடமிருந்து
உன்னை துன்பப்படுத்தியவரையும்
அவருக்கு ஆபத்து என்றால் உதவ வேண்டும்
என்ற உன்னதமான செயலை
கற்றுக்கொள்!
உன்னை நீயே கற்றுக்கொள்!
தவறைக் கொஞ்சம் மாற்றிக்கொள்!

எழுதியவர் : ஹரிகரன் (30-Apr-13, 10:52 pm)
சேர்த்தது : ஹரிகரன்
பார்வை : 140

மேலே